ஊழலுக்கு எதிராக புகார் கொடுக்க எளிமையான வழி

ஊழலுக்கு எதிராக புகார் கொடுப்பதை எளிதாக்கியுள்ள பத்தாம் வகுப்பு மாணவன் ஆதித்யா: ஊழலை ஒழிக்கத் துடிப்பவர்களுக்கு, ஊழல் குறித்து புகார் கொடுக்க எளிமையான வழிகள் இல்லை. ஆனால், இனி அப்படி இருக்காது. மொபைல் போனிலிருந்து, ஒரு எஸ்.எம்.எஸ்., மூலம் இந்தியாவையே மாற்றிக் காட்டலாம்.அன்னா ஹசாரே வின் போராட்டத்தினால் பெரிதளவில் ஈர்க்கப்பட்டு, அதற்காக இணையதளங்கள் மூலம் ஆதரவு திரட்டிய சிலரில் நானும் ஒருவன். "கரப்ஷன் பிரீ இந்தியா' என்பது, பல ஆயிரம் பேர் கொண்ட இணைய குழுமம்.அரசு அலுவலகங்களில், லஞ்சம் கேட்டாலோ, கடைகளில் விற்கும் பொ ருட்கள் எம்.ஆர்.பி., யை விட அதிகமாக வசூலிக்கப்பட்டாலோ, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கப்படுவதைக் காண நேர்ந்தாலோ, இன்னும் ஊழலும், லஞ்சமும் எந்த வடிவத்தில் கொடுப்பதையோ, வாங்குவதையோ சந்திக்க நேர்ந்தாலோ, உடனே,www.corruptionfree.in என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.அந்தப் புகார்கள் நேரடியாக என் இணையதளத்திற்குச் சென்றுவிடும். 
                      அதை உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கு என் குழுவைச் சேர்ந்தவர்கள் அனுப்புவோம். "பெயர் குறிப்பிட வேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டால், அதற்கும் வசதியுண்டு. லஞ்சம் வாங்குவதையும், விதிமுறை மீறல்களையும் புகைப்படமாகவும், வீடியோ வாகவும் கூட அனுப்பலாம்.ஊழலை ஒழிக்க வேண்டும் என, பேசிக்கொண் டிருந்தால் மட்டும் போதாது; செயலில் இறங்க வேண்டும். புகார் கொடுக்காமல் இருப்பது தான் ஊழலின் வளர்ச்சிக்குக் காரணம். ஊழல் ஒழிப்பில் முதல் படி, புகார் கொடுப்பது தான். அதற்கான எளிய முறை தான் இந்த இணையதளம்!

Post a Comment

0 Comments