இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை


இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப் பட்டன. IMRB and IAMAI (Indian Market Research Bureau and Internet Mobile Association Of India) என்ற இரு அமைப்புகள் இந்த தகவல்களைத் தந்துள்ளன. 

அனைத்து மெட்ரோ நகரங்களிலும், மும்பையில் தான் அதிக எண்ணிக்கை யில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். 81 லட்சம் பேர் இன்டர்நெட்டில் உலா வருபவர்களாக இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 62 லட்சம். டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள NCR என அழைக்கப்படும் இடங்களில், இந்த எண்ணிக்கை முறையே 62 லட்சம், 50 லட்சமாக உள்ளது. 

இந்தியாவின் தொழில் நுட்ப தலைநகரம் மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு இந்த வகையில் பின் தங்கியே உள்ளது. இங்கு 17 லட்சம் பேர் தான் தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை அடுத்து ஆறாவது இடத்தில் உள்ளது. 

மெட்ரோ நகரங்களின் ஜனத்தொகையுடன், அந்த நகரங்களில் இன்டர் நெட்டினைப் பயன்படுத்து வோர் விகிதம் குறைவாக உள்ளது. ஆனால், இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் சிறிய நகரங்களில், இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவோர் விகிதம் கூடுதலாக உள்ளது. 
இன்டர்நெட் என்பது சிறிய நகரங்களில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது. கிராமங்களில் மட்டுமின்றி, பெரும் நகரங்களிலும் இன்டர்நெட் பயன்பாடு அறியாதவர்கள் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சீனாவில்சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சம் வெப் லிங்குகளை சீன அரசு தடை செய்துள்ளது. சீனாவில் செயல்பட்டு வரும் இணையதளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் அவைகளின் செயல்பாடுகள் அனைத்தும் அரசங்காத்தின் இணைய தள கட்டுப்பாட்டு வாரியம் கட்டுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சுமார் 4 லட்சம் இணைய தள இணைப்புகளை சீன அரசாங்கத்திடம் அனுமதி பெறாமல் லிங்குகள் எனப்படும் இணைய தள இணைப்புகள் வழங்கி வந்ததை அரசு கண்டறிந்தது. இதனையடுத்து அனைத்து லிங்குகளையும் அதிரடியாக ரத்து செய்தது.மேலும் சட்ட விரோதமாக லி்ங்குகளை பெற்று தந்த சுமார் இரண்டாயிரத்து 400 இண்டெர்நெட் மையங்களுக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு கோடை காலத்தின் போது இணையதள லிங்குகளை நெறிமுறைப்படுத்த உத்தரவிட்ட பின்னரும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில்சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சுமார் 13மில்லியன் ஆடியோ மற்றும் வீடியோ க்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments