போலி ஃபேஸ்புக் பக்கம்

காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி பெயரில் போலியான ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


அங்கிட் சைனி என்பவர் இந்த பக்கத்தை உருவாக்கியுள்ளார். யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கையால் கோபமடைந்த அவர் இதுபோல் ராகுல் காந்தி பெயரில் போலி பக்கத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார். அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து மகளிர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இளம்பெண்களுக்கும் தகவல்கள் அனுப்பியுள்ளார். இதுகுறித்து பலரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் ராகுல் காந்தி பெயரில் போலி கணக்கை உருவாக்கியவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போனும், லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.


#############################


நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை மணக்க உள்ளார். பிரசன்னா தனது உதவியாளர் மூலம் இதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.


பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் சினேகா முதன்முறையாக இணைந்து நடித்தார். அப்போதுமுதல் இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளிவந்தன.
தாங்கள் காதலிப்பது உண்மைதான் என இப்போது இருவரும் ஏற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளோம். திருமண நிச்சயதார்த்த தேதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. திருமணம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பிரசன்னா தெரிவித்தார்.

No comments: