கூகுள் பாய்

                         
உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் வசிக்கும் ஐந்து வயது சிறுவன், அன்மோல் சுவாமி, தன் புத்தி கூர்மையால், சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து உள்ளான்.உ.பி.,யில், சமாஜ்வாதியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு மீரட்டில் வசிக்கும், 5 வயது அன்மோல் சுவாமியை, சமூக ஊடகங்கள், 'கூகுள் பாய்' என்றழைக்கின்றன.

இந்த சிறுவனிடம், நம் நாட்டின் பிரதமர் யார் என, கேட்டால், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல், மோடி வரை, அனைத்து பிரதமர்களையும் வரிசைப்படியும், பின்னிருந்து முன்னோக்கியும் கூறுகிறான். அதே போல், ஏதாவது ஒரு நாட்டின் தலைநகரை கேட்டால், உலக நாடுகளையும், அவற்றின் தலைநகரையும் வரிசையாக கூறுகிறான். இதன் காரணமாக, சமூக ஊடகங்களில், அவன் பிரபலமடைந்திருக்கிறான். பள்ளியில் சேர்த்தபின், தன்னுடைய திறமையால், பல விருதுகளை வென்ற அன்மோலுக்கு, கடந்த பிப்ரவரியில், மீரட் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் இணைந்து, 'மீரட்டின் கூகுள் பாய்' என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தன.

No comments: