உலகில் ஏழைகள் எண்ணிக்கை குறைகிறது

கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்துக்கும் கீழாக முதன்முறையாக குறைய உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக அளவிலான வறுமை குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், வாஷிங்டனில் வெளியிட்டார். கடும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை இந்தாண்டு இறுதியில் 70 கோடியே 20 லட்சமாக குறையும் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 9 புள்ளி 6 சதவிகிதம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பகுதி ஏழைகள் ஆப்ரிக்க கண்டத்தின் சஹாரா பகுதிகளிலும் ஆசியாவிலும் வாழ்வதாக அவர் கூறினார். வளரும் நாடுகளின் பொருளாதாரம் சீரான வளர்ச்சி கண்டு வருவதும் கல்வி மற்றும் மருத்துவத்துக்கு அரசுகள் அதிகம் செலவழிப்பதும் மக்களை கொடுமையான வறுமையின் பிடியில் இருந்த மீட்டு வருவதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு நாளைக்கு 125 ரூபாய்க்கும் கீழான தொகையை கொண்டு வாழ்ந்து வருபவர்களே கடும் வறுமையின் பிடியில் இருப்பவர்கள் என உலக வங்கியி்ன் வரையறை கூறுகிறது

No comments: