கார்ப்பரேட் வரி 25 சதவீதமாக குறைக்கப்படும்

               நிறுவனங்கள் மீதான வரி (கார்ப் பரேட் வரி) அடுத்த 4 ஆண்டுகளில் 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்த கார்ப்பரேட் வரி குறைப்பு மூலம் நியாயமாகவும் உலகத்தோடு போட்டி போடும் வகையிலும் வரி சூழலை கொண்டு வர மத்திய அரசு உறுதியளிப்பதாக அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
புனேயில் தொழிலதிபர்கள் மத்தியில் பேசிய அருண் ஜேட்லி, ``நேரடி வரி உலகளாவிய வகையில் போட்டி போடுவதாக இருக்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கார்ப்பரேட் வரி 34 சதவீதத்திலிருந்து படிப்படியாக 25 சதவீதமாக குறைக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது.
         முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முன் தேதியிட்ட வரி உலக முதலீட்டாளர்கள் மத்தியில் அவப் பெயரை தேடித்தந்தது மட்டுமல்லாமல் முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறவும் காரணமாக இருந்தது. மேலும் முந்தைய ஆட்சியில் தனியார் முதலீடு குறைவாக இருந்ததும், திட்டங்கள் தாமதமானதும்தான் தற்போதைய முதலீடு சூழல் மந்தமாக இருப்பதற்கு காரணம். தற்போது மத்திய அரசு முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது போன்ற நடைமுறை களை வேகமாக செயல்படுத்தி வருகிறது.
முதலீட்டாளர்களை அழைப் பதில் மாநிலங்களிடையே போட்டி நிலவுகிறது. ஆனால் முதலீட் டாளர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள். நமது வரி அமைப்பு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
                   நடப்பு காலாண்டில் அரசாங்க செலவுகள் அதிகரித்துள்ளன. முதலீடுகளை அதிகரிக்க தனியார் நிறுவனங்கள் அரசாங் கத்துடன் இணைந்து செயல் பட முன்வரவேண்டும். நடப்பு நிதி யாண்டில் முதல் 6 மாதங்களில் மறைமுக வருவாய் 35.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 3.9 சதவீதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது அதனால் திட்டமிட்ட செலவீனத்தை குறைக்க அவசியமில்லை.
ஜிஎஸ்டி மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும். ஆனால் புதிய வரிவிதிப்பு மசோதாவால் ஏற்படப்போகும் பயன்களை புரிந்து கொள்ளாமல், அவர்கள் முன்மொழிந்த மசோதாவை அவர்களே எதிர்த்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் மீது ஜேட்லி குற்றம் சாட்டினார்.
கடந்த வருடம் மத்திய அரசு திட்டமிட்ட செலவினத்தை 15 சதவீதம் குறைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments