அரசாங்க கண்காணிப்பு மற்றும் இணையத் தணிக்கை காரணமாக இணைய பயன்பாட்டாளர்களுக்கான சுதந்திரம் என்பது குறைந்து வருவதாக உலகளாவிய இணைய அமைப்பு (www) எச்சரித்துள்ளது.
அரசாங்கங்களின் கண்காணிப்பு காரணமாகவும், இணையத் தணிக்கை காரணமாகவும் இணைய தளங்களில் பயன்பாட்டாளர்களுக்கான சுதந்திரம் என்பது குறைந்து வருவதாக உலகளாவிய இணைய அமைப்பு(www) எச்சரித்துள்ளது.
உலகில் 80 வீதமான நாடுகளில், பெருமெடுப்பில் இணையத்தில் உள்நுழைந்து உளவுபார்ப்பதை தடுப்பதற்கான சட்டங்கள் முற்றிலும் இல்லாமலோ அல்லது பலவீனமாகவோ இருப்பதாக அந்த அமைப்பின் வருடாந்த இணையச் சுட்டி கூறுகின்றது.
இணையத்தில் பாலியல் அடிப்படையில் நடக்கும் வன்செயல்களை தடுக்க உலகின் முக்கால்வாசி நாடுகளின் அதிகாரிகள் தவறிவிடுவதாகவும் அது கூறுகின்றது.
அத்துடன் நாடுகளின் அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக உலகில் 60 வீதமான மக்கள் இணைய தளங்களுக்குள் செல்ல முடியாது இருப்பதாகவும் அது கூறுகின்றது.
source.hindu
0 Comments