நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல நாளிதழான, ' நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ், இந்தியா மற்றும் இந்திய தேர்தல் குறித்து தெரிவித்துள்ள சில கருத்துக்கள் வருமாறு:




* இந்திய தேர்தல் உலகிலேயே மிகப் பெரிய நிகழ்வு. 
* பல்வேறுபட்ட ஜனநாயக சிறப்பு நிகழ்வு.
* 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஓட்டளித்து, தங்களுடைய பழமையான நாகரிகத்தை எதிர்காலம் நோக்கிச் செலுத்துவதற்கான சிறிய முயற்சி.
*. இந்தியாவின் அண்டை நாடுகளான நிலையற்ற மற்றும் வன்முறை தலைவிரித்தாடும் பாகிஸ்தானிலோ, சீனாவிலோ, மியான்மாரிலோ தேர்தல் நடைபெறும்போது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
* இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் பிரமாண்டமானவை. குறிப்பாக வளர்ச்சியிலும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேறு எங்கும் காண முடியாத தன்மையுடைய சவால்களைச் சமாளித்து வருகிறது. அதன் அண்டை நாடுகளையும் இந்த சவால்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உலகிலேயே அதிக அளவில் வேறுபட்ட நூற்றுக்கணக்கான மொழிகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ள ஒரு நாடு, இந்த சவால்களை சமாளித்து தாக்குப்பிடிப்பதோடு நின்றுவிடாமல், செழித்து வளர்கிறது என்றால் அதை விட ஆச்சர்யமானது ஏதும் இருக்க முடியாது. 
* இந்து மதம், புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம் ஆகியவை பிறந்த நாடு இந்தியா; உலகிலேயே அதிக அளவில் முஸ்லிம்களைக் கொண்ட 2வது நாடு இந்தியா.
* இங்கு கிறிஸ்தவ மதம் 2 ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.
* யூதர்களின் 2வது கோயிலை ரோமானியர்கள் எரித்ததிலிருந்து, யூதர்கள் வாழும் இடம் இந்தியா.
* தலாய் லாமாவும் அவருடைய தலைமறைவு அரசும் செயல்படும் நாடு இந்தியா.
* பார்சி இன மக்கள் அவர்களுடைய தாய்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், அடைக்கலமாக வந்து செழித்து வாழும் நாடு இந்தியா.
* ஆர்மீனியர்களும் சிரியா நாட்டவரும் வாழும் நாடு இந்தியா.
* உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தை, கடந்த ஆயிரத்து 500 ஆண்டுகளாக கொண்டுள்ள நாடு இந்தியா. இதற்கு அடுத்தாற் போல் பெரிய பொருளாதாரம் 200 ஆண்டே பழமையானது.
* தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முஸ்லிம் ஜனாதிபதிகளைக் கண்ட நாடு இந்தியா.
* ஒரு சீக்கியரை பிரதமராகவும், ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பெண்ணை ஆளும் கட்சியின் தலைவராகவும் கொண்டிருப்பது இந்தியா.
* ஏவுகணை விஞ்ஞானியாக திகழ்நத ஒரு முஸ்லிம் ஜனாதிபதி, நாட்டு மக்களின் ஹீரோவாக மதிக்கப்படும் நாடு இந்தியா. அவரை அடுத்து ஒரு பெண் ஜனாதிபதியைக் கண்ட நாடு இந்தியா.
* ஆண்டுக்கு 4 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்கும் நாடு இந்தியா; 2025ல் அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடான எண்ணிக்கையில் நடுத்தர மக்களைக் கொண்டிருக்கும் நாடாக மாற இருப்பது இந்தியா.
* எத்தனையோ சவால்களும் இடையூறுகளும் இருந்தாலும், சினிமா, கலை, பொருளாதார வளர்ச்சி, ஓட்டுப் போடும் முறை ஆகியவற்றில் நம்பிக்கையும் துடிப்பும் விதைக்கப்பட்டுள்ள நாடு இந்தியா.
* இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவில், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தில் 10 சதவீதம் பேர் ஓட்டளிக்க தயாராகி வருகின்றனர் என்றால் அது உலகம் முழுவதற்குமே எழுச்சி ஊட்டும் அம்சமாகும். 

Post a Comment

0 Comments