சமூக வலைதளத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்


பேஸ்புக்கைப் போன்றதொரு சமூக வலை தளமான யாமர் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த சமூக வலைதளம் செயல்பட்டு வருகிறது.
2008ல் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் டேவிட் சாக்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது யாமர் சமூக தளம். தற்போது யாமர் சமூக தளத்தை 2,00,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
தற்போது யாமரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் விரைவில் யாமர் மைக்ரோசாப்டின் கைகளுக்குள் வந்துவிடும் என்று தெரிகிறது.
சமூக வலை தள சந்தையில் யாமரோடு ஜைவ், சாட்டர் மற்றும் அசனா போன்ற வளைத்தளங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மைக்ரோசாப்டின் கையில் யாமர் வந்தால் மேலும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இனி யாமர் ஒரு சமூக வலை தளமாக மட்டும் இல்லாமல் மைக்ரோசாட் வழங்கும் அறிவுக் களஞ்சியமாக இருக்கும் என நம்பலாம்.

Post a Comment

1 Comments