தல’ தோணியின் எந்த 'ஹேர்ஸ்டைல்' உங்களுக்குப் பிடிக்கும்?

ஐ.பி.எல் மேட்ச் பற்றிதான் இன்றைக்கு எங்குமே பேச்சு. அதுவும் சென்ற முறை ஐ.பி.எல் கப் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் கப் வெல்லுமா என்பதும், அணியின் கேப்டன் தோணி அதை நிறைவேற்றுவாரா என்பதும் பலரது எதிர்பார்ப்பு. கேப்டன் தோணி ஆரம்பத்தில் இந்திய அணியில் இணைந்தது முதல் இன்றைக்கு கேப்டனாக ஜொலிப்பது வரை பல்வேறு ஹேர் ஸ்டைல்களில் பலரையும் கவர்ந்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் தோணியின் ஹேர்ஸ்டைல் மீது அலாதியான மோகம் தான். தோணியின் வித விதமான ஹேர் ஸ்டைல் குறித்து விவரிக்கின்றனர் பிரபல ஸ்டைலிஸ்டுகள்.

கிரிக்கெட் வீரர்களை தினசரி டிவியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்தாலும் அது ஸ்டைல்தான். முக்கியமாக தலை அலங்காரம் அனைவரையும் கவரக்கூடியது. இந்திய கிரிக்கெட் கேப்டன் தோணி முதலில் நீளமாக முடியை வளர்த்திருந்தார். அதுவே அவரை தனியாக அடையாளப் படுத்தி காட்ட உதவியது. உலகப் கோப்பையை ஜெயித்த உடன் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென்று வழு வழு என்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தார். அதுவும் அனைவராலும் கவரப்பட்டது. அதுதான் தோணி. தன்னுடைய கேப்டன்ஷிப் பற்றி மட்டுமல்ல தன்னைப் பற்றியும் தனியாக பேசவேண்டும் என்று விரும்புபவர் கூல் கேப்டன் தோணி.

தோள் பட்டை வரை நீண்ட முடி 

இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே முதல் முதலில் நீளமுடி வளர்த்தவர் தோணிதான். அந்த முடியும் கோல்டன் கலர் டை அடித்தது கூடுதல் கவர்ச்சியாக இருந்தது. பல கிரிக்கெட் ரசிகர்கள் தோணியின் அதிரடி ஆட்டத்தில் மயங்கி நீள முடிக்காரர்களாக மாறினர் என்பது சிறப்பம்சம்

க்ராப்கட் அழகு முடி

தோள்பட்டை வரை நீண்டிருந்த முடியை தனது நண்பரும் பாலிவுட் நடிகருமான ஜான் ஆப்ரஹாம் கோரிக்கையை ஏற்று குட்டையாக அழகாக வெட்டிக்கொண்டார். இந்த ஸ்பைகி ஹேர் ஸ்டைல் இளம் பெண்கள் பலரை அவரது ரசிகைகளாக மாற்றியது.

மொட்டைத்தலை

உலகக் கோப்பை வெற்றியை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருந்த நேரம். தோணியிடம் ஆர்பாட்டம் எதுவும் இல்லை. கூலாக போய் மொட்டை போட்டுக்கொண்டு வந்து விட்டார். பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இதுபற்றி கேள்வி எழுமே என்ற கவலை இல்லை. உலகக் கோப்பை வெற்றியைப் பற்றி கேட்ட கேள்வியை விட தோணியின் மொட்டை பற்றியே கேள்வி எழுந்தது. ஊடகங்கள் பரபரப்பாக பேசின. அதுதான் தோணி சிறந்த ட்ரெண்ட் செட்டர் என்பதை நிரூபித்தவர்.

ஆர்மி ஸ்டைல்

முடி வளர்ந்த உடன் ஆர்மி ஸ்டைல் ஹேர் கட் செய்து கொண்டார். இது அவருக்கு அம்சமாக பொருந்தி வந்தது. சமீபத்தில் தோணி தன்னுடைய ஹேர் ஸ்டைலை லேயர்டு டைப்பிற்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை முறை ஹேர் ஸ்டைல் மாற்றினாலும் சரி தன்னுடைய பணியை சிறப்பாக செய்வதில் தோணிக்கு நிகர் தோணிதான். அவருடைய ரசிகர்களை கவர்ந்ததும் அந்த கூல் டைப் தான். இதேபோல் கால்பந்தாட்ட வீரர்களான டேவிட் பெக்காம் உள்ளிட்டவர்களும் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்பவர்கள்தான். ஆனால் தோணியைப் போல பல வித தலை அலங்காரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை.

Post a Comment

1 Comments

'முடி' எப்படி இருந்தாலும் பரவாயில்லை ! 'முடி'வு ( Match Result )நன்றாக இருந்தால் சரி !