ஹவுஸ்புல் 2 ரீமேக்கில் ஜீவா, ஆர்யா, விஷால்?

இந்தியில் ஜான் ஆப்பிரஹாம், அசின், அக்ஷய்குமார், ரித்தேஷ் தேஷ்முக் என ஸ்டார் கூட்டணியில் வெளியான ஹவுஸ்புல் 2 வசூலில் சாதனை படைத்துள்ளதை தொடர்ந்து, அப்படத்தினை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தமிழ் ரீமேக்கில், ஆர்யா, விஷால், ஜீவா ஆகியோர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே டெல்லி பெல்லி ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார் ஆர்யா இந்நிலையில் அவருக்கு இன்னொரு ரீமேக் வாய்ப்பும் ஹவுஸ்புல் 2 ரூபத்தில் வந்துள்ளது. ஏற்கனவே இந்தி த்ரீ இடியட்ஸ் ரீமேக்கில் நடித்த ஜீவா, ஹவுஸ்புல் 2 ரீமேக்கில் நடிப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. தமிழ் ரசிகர்கள் தற்போது காமெடி சப்ஜெக்டுகளை விரும்புவதால், ஹவுஸ்புல் 2 ரீமேக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கோடம்பாக்கம் கூறுகிறது. தமிழில் ரிலீஸான பந்தா பரமசிவம் என்ற படத்தின் ரீமேக் தான் ஹவுஸ்புல். இந்தியில் கல்லா கட்டியதால், இப்போது புதுப்பொலிவுடன் மீண்டும் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் விஷாலும் ஒரு ரோலில் நடிக்கலாம் என்கிறது விவரமறிந்த வட்டாரம். 

No comments: