ஏழைகளுக்கு உதவ புதிய அமைப்பு தொடங்குகிறார் அஜீத்?

ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்ட பிறகு மங்காத்தாவை ரிலீஸ் செய்து ஹிட் செய்தும் காட்டிய தெம்பிலிருந்த அஜீத், விரைவில் புதிய இயக்கம் தொடங்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜீத் ரசிகர் மன்றம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் எல்லாமே அமைதியாகத்தான் போயின.

ஆனால் சமீப காலமாக நிறைய பிரச்சினைகள். நிர்வாகிகளின் நடவடிக்கைகள் அஜீத்தை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கின. அவர்களை கட்டுக்குள் வைக்க பல்வேறு நிபந்தனைகளை அவர் உருவாக்கினார்.

அப்படியும், ரசிகர்களின் நிர்ப்பந்தம், அவர்கள் கிளப்பும் பிரச்சினைகள் அஜீத்துக்கு ரசிகர் மன்றங்கள் மீதே அதிருப்தியை உண்டாக்கிவிட்டது.
இதனால் கடந்த ஆண்டு தனது பிறந்த தினத்தின்போது தன் பெயரில் இயங்கி வந்த ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் தொடர்ந்து மன்றங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நலப்பணிகளையும் செய்கிறார்கள்.

இந்த நிலையில் தன்னிடம் உதவி கேட்டு நிறையப் பேர் வருவதால், அவர்களில் சரியானவர்களைத் தேர்வு செய்து தக்க முறையில் உதவி செய்வதற்காக அறக்கட்டளை போன்ற அமைப்பினை ஏற்படுத்த முடிவு செய்துள்ளாராம்.
பில்லா 2-க்குப் பிறகு அஜீத் இதுகுறித்து விவரமாக அறிவிப்பார் என்கிறார்கள்.

No comments: