ஆசஸஸின் புதிய டேப்லட்!


ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில், டைம்லைனை இனி கட்டாயமாக்குகிறது ஃபேஸ்புக். நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயத்தினை ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி பார்க்கும் ஓர் வசதியை டைம்லைன் மூலம் ஏற்படுத்தியது ஃபேஸ்புக்.
இந்த டைம்லைன் பக்கம் சிலருக்கு பிடித்தும், சிலருக்கு பிடிக்காமலும் இருந்தது. இதனால் டைமலைனை விரும்பியவர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று இருந்தது. இனி இந்த டைம்லைன் வசதி ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்திற்கும் இன்னும் 30 நாட்களில் கட்டாயமாக்க இருக்கிறது  ஃபேஸ்புக்.
இந்த டைம்லைன் பக்கம் சிலருக்கு பிடிக்காமல் இருந்தாலும் இதில் 60 புதிய அப்ளிக்கேஷன்கள், ஆட் டூ மேப், லிஸன் டு மியூசிக் போன்ற புதிய புதிய வசதிகளையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
#############################################################

பல மின்னணு சாதனங்கள் வெளியிடப்பட்டாலும் அதில் சில சாதனங்கள் மட்டுமே எப்பொழுது வெளியாகும் என்றஎதிர் பார்ப்பினை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றன. அந்த வகையில் ஆசஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தினை அதிகம் தூண்டி இருக்கிறது என்றே சொல்லலாம். இஇஇ பேட் டிரான்ஸ்ஃபார்மர் பிரைம் என்ற புதிய டேப்லட்டை ஆசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த டேப்லட் 4 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இஇஇ பேட் டேப்லட் குவாட் கோர் சிபியூ கொண்டு, ஆன்ட்ராய்டு 3.2 ஹனிகோம்பு இயங்குதளத்தில் இயங்கும். 10.1 இஞ்ச் பேக்லைட் டபிள்யூஎக்ஸ்ஜிஏ சூப்பர் ஐபிஎஸ் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். இதனால் 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.
இந்த டேப்லட் 8 மெகா பிக்ஸல் கேமராவையும், 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவையும் வழங்கும். 64 ஜிபி வேரியன்ட் வசதியினை கொடுக்கும் இந்த இஇஇ பேட் டிரான்ஸ்ஃபார்மர் பிரைம் டேப்லட் ரூ.49,999 விலையில் கிடைக்கும்.1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பா !