உடல் முழுவதும் கொப்புளங்களால் அவதி-கலெக்டர்- எம்.எல்.ஏ. நடவடிக்கை

கரூரை அடுத்த உள் வீரராக்கியத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது52). இவருக்கு உடல் முழுவதும் அதாவது தலையில் இருந்து பாதம் வரை கண் விழியை தவிர சிறு, சிறு கொப்பளங்கள் போல் உருண்டை, உருண்டையாக ஏற்பட்டு விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார். அவரது முகத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொப்புளங்கள் உள்ளது. உடல் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொப்பளங்கள் உள்ளதாக கூறப்படுகிது. அவரது முகமே அடையாளம் இன்றி காணப்படுகிறது.



இவர் மிகவும் வேதனையில் அவதிப்பட்டு வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த காமராஜ் எம்.எல்.ஏ. அவரது வீட்டிற்கு சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு எம்.எல்.ஏ.தனது சொந்த நிதி ரூ.15 ஆயிரம் நேற்று வழங்கினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஷோபனாவிடம், விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பழனியப்பனுக்கு ரூ.1,000 ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பழனியப்பன் காலை சுமார் 10 மணி அளவில் கலெக்டரிடம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கு மாறு மனு கொடுத்தார். மனுவை பரிசீலித்த கலெக்டர் மதியம் 12 மணி அளவில் அதாவது 2 மணி நேரத்தில் பழனியப்பனுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார்.

விசித்திர நோயால் பாதிக்கப் பட்ட தொழிலாளி பழனியப்ப னுக்கு மனு கொடுத்த 2 மணி நேரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுத்த காமராஜ் எம்.எல்.ஏ., உத்தரவு வழங்கிய கலெக்டர் ஷோபனா ஆகியோரை அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பாராட்டினர்.

Post a Comment

0 Comments