நடிகை நயன்தாரா குடும்பத்தினர் கண்டனம் பிரபுதேவாவுக்கு

நயன்தாராவும் பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். பிரபு தேவா திருமணத்துக்கு சம்மதிக்காததால் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார்.ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு தாமதமாகவே தெரிந்தது. 

இதையடுத்து அவரை உதறிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். நாகார்ஜுனா ஜோடியாக தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அஜீத்துடனும் தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறியதாவது:-

பிரபுதேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண். இப்படி அவள் நிலைமை ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை.நயன்தாராவுக்கு பிடிவாத குணம் ஜாஸ்தி என்கின்றனர்.அது தவறு.அவள் வெகுளியானவள்.முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள்.இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து இருக்கிறாள். 

சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார்.ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார். அவரை பிரிந்து பிரபுதேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபுதேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள்.

ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனி மேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்து இருக்கும்.

எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டு விட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறோம். 

No comments: