தோனிக்கு மனைவி சாக்ஷி ஆதரவு


 இந்திய அணியின் நிலையற்ற தன்மை, சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு உள்ளிட்ட காரணங்களால், கேப்டன் தோனி மீது அனைவரும் எதிர்ப்பு காட்டி வரும் நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். இதுதொடர்பாக, சாக்ஷி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, உங்களை (தோனி) பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படாதீர்கள், உங்களின் வெற்றிக்கு எப்போதும் ஆதரவாக உள்ளோம்.
     இந்நிலை ஒருநாள் மாறும். தற்போதைய நிலையில், உங்களை இகழ்பவர்கள் மீண்டும் புகழும் நிலை வரும் என்று அவர் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில், 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம், பட்டியலில் இறுதி இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில், கேப்டன் தோனி விளையாடவில்லை என்பது நினைவிருக்கலாம். 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மனைவி சொல்லே மந்திரம் !