ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் சாரு நிவேதிதா.

 சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.

ஒரு பெண்ணிடம் சாட்டில் சாரு நிவேதிதா அநாகரீகமாக பேசினார் என்று முன்பு சர்ச்சை வெடித்தது. இதனால் அவரது ரஜினி விமர்சனம் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மிகச் சிறப்பான உரையையும் அவர் கொடுத்திருந்தார்.

ஆனால் தற்போது ரஜினியை கடுமையாக சாடியுள்ளார் சாரு நிவேதிதா. அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை.

காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது.ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா.சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.

1 comment:

Kumaran said...

என் இனிய இரவு வணக்கம்,
என்ன சொல்வது இதை பற்றி..நான் ரஜினியின் ரசிகன்...சாரு நிவேதிதாவை எனக்கு அதிகம் தெரியாது..நன்றி பதிவுக்கு.

சைக்கோ திரை விமர்சனம்..