மாத்திற்கு 3,000ஆக உயர்த்தும் மஹிந்திரா

எகிடுதகிடான புக்கிங் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, புதிய எஸ்யூவியின் உற்பத்தியை மாதத்திற்கு 3,000 ஆக உயர்த்த மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகம் செய்தது. எக்ஸ்யூவி 500 என்ற பெயரில் வந்த இந்த புத்தம் புதிய எஸ்யூவி எதிர்பாராத அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்கட்டமாக 8,000 எக்ஸ்யூவி 500 புக்கிங் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி நெருக்கடியை கருத்தில்க்கொண்டு, புக்கிங்கை திடீரென நிறுத்தியது மஹிந்திரா. 

முதலில் மாதத்திற்கு 600 எக்ஸ்யூவிக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், புக்கிங் நெருக்கடியை கருத்தில்க்கொண்டு உற்பத்தியை 2,000 ஆக உயர்த்த மஹிந்திரா முடிவு செய்தது.இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 25ந் தேதி முதல் கடந்த 3ந் தேதி வரை 10 நாட்களுக்கு இரண்டாம் கட்ட புக்கிங் நடந்தது. மேலும், மாதத்திற்கு 2,500 எக்ஸ்யூவிக்களை புக்கிங் செய்ய மஹிந்திரா திட்டமிட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், 25,000க்கும் அதிகமான எக்ஸ்யூவி 500 புக்கிங் செய்யப்பட்டது. இதனால், திக்குமுக்காடி போயுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவியின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.மாதத்திற்கு 3,000 புதிய எக்ஸ்யூவிக்களை புக்கிங் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதன் மூலம், புதிய எக்ஸ்யூவிக்கு ஏற்பட்டுள்ள தேவையை கணிசமாக குறைக்க முடியும் என்று மஹிந்திரா கருதுகிறது.

No comments: