செல்போனில் 'சீன் படம்' பார்த்த 3 பாஜக அமைச்சர்கள்- ராஜினாமா

கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கையில் செல்போனில் 3 பாஜக அமைச்சர்கள் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டசபை கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் டிவி சேனல்களும் சபை நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன.

அப்போது, சட்டசபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதி தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதை தனியார் சேனலின் கேமராமேன் அப்படியே 'ஷூம்' செய்ய, ஒரு கருப்பு சேலை அணிந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக உடைகளைக் கழற்றி எறியும் காட்சிகள் வந்தன.

அதைத் தொடர்ந்து இன்னொரு வீடியோவில் ஒரு பெண்ணும் சில ஆண்களும் உடலுறவில் ஈடுபடும் காட்சிகளும் வந்தன. இதை அமைச்சர் லக்ஷ்மன் சாவாதியும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டில் ஆகியோரும் பார்த்து என்ஜாய் செய்கின்றனர்.மேலும் சுற்றுச் சூழல் துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் கிருஷ்ணா பாலிமரும் இதை எட்டிப் பார்க்கிறார்.

சட்டசபை நடந்து கொண்டிருந்தபோதே கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த வீடியோவை அமைச்சர்கள் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தனர்.அமைச்சர்களின் இந்த வீடியோ குஜால் காட்சிகள் நேற்றிரவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரச்சனையில் உள்ள பாஜக அரசுக்கு அமைச்சர்களின் நடவடிக்கைகள் அவப்பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

இதையடுத்து சாவாதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அது என்னுடைய செல்போனே அல்ல. அது அமைச்சர் பாலிமாருடையது. அது ஒன்றும் ஆபாச வீடியோ இல்லை. ஒரு வெளிநாட்டில் ஒரு பார்ட்டியில் பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் வீடியோவைக் காட்டினார். கர்நாடகத்திலும் அது போன்ற பார்ட்டிகள் நடப்பதும், இதனால் நமது கலாச்சாரம் கெடுவதும் குறித்து கவலைப்பட்ட நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். உண்மையில் அது ஆபாச வீடியோவே அல்ல என்றார்.ஆனால், அது ஒரு புளு பிலிம் வீடியோ என்பதும், ஒரு பிளாக் ஸ்பாட்டில் இருந்து டெளன்லோட் செய்யப்பட்டது என்பதையும் தொலைக்காட்சிகள் விவரமாக சுட்டிக் காட்டியுள்ளன.இந் நிலையில் அது என்னுடைய செல்போன் அல்ல என்று அமைச்சர் பாலிமார் கூறியுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி நேற்றிரவு முதல்வர் சதானந்த கெளடா, மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது, இந்த மூன்று அமைச்சர்களையும் பதவி விலக வைக்காவிட்டால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பிரச்சனையாகிவிடும் என எச்சரித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து 3 அமைச்சர்களும் இன்று காலை தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.முன்னதாக சட்டசபையில் இருந்த கேமராமேன்களில் ஒருவர் கூறியதாவது, கூட்டம் முடிவதற்கு 15 நிமிடங்கள் இருக்கையில் அமைச்சர் சாவாதி எங்கள் பக்கம் அடிக்கடி திரும்பினார். இதனால் சந்தேகம் அடைந்து அவர் இடத்தை ஜூம் செய்தபோது அவர் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது என்றார்.

No comments: