கோ படத்தில் அமிதாப் பச்சன்


ஹிந்தியில் மொழி மாற்றம்  செய்யப்படும் கோ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார்.
 கோ படத்தில் கதாநாயகன் ஜீவாவின் புகைப்பட பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு, அந்தப் படத்தில் முதல்வராக நடித்த பிரகாஷ் ராஜின் கதாபாத்திரமும் பேசப்பட்டது.பிரபல பாலிவுட் இயக்குனர் பிரகாஷ் ஜா தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் முதலில் அன்னா ஹசாரேவை நினைவூட்டும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வரும்படி அழைத்திருக்கிறார்.


இடையில் திடீரென்று கோ படத்திற்கான உரிமை வந்ததும், அந்தக் கதையை அப்படியே வைத்து விட்டு தற்போது கோ படத்தை மொழிமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் பிரகாஷ் ஜா. மேலும் இப்படத்திற்கு சத்யாகிரகா என்று பெயர் வைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஏன் இந்தப் பெயர் வைத்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, கோ படத்தில் இடம்பெற்றிருக்கும் தின அஞ்சல் பத்திரிகையின் பெயராக சத்யாகிரகா என மாற்றி விட்டேன் என்று கூறினார்.

தமிழில் கோ படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: