ரொம்ப எளிமையானவர் தான் விஜய்-ஸ்ரீகாந்

பைக்ரேஸ் பிரியரான ஸ்ரீகாந்தை, "ரோஜாக்கூட்டம்" படம் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்த ஸ்ரீகாந்த், இடையில் சிறு சிறு சறுக்கல்களை கடந்து இப்போது டைரக்டர் ஷங்கரின் நண்பனில் விஜய், ஜீவாவோடு நடித்து ரொம்ப பரபரப்பாக காணப்படுகிறார். நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி ஸ்ரீகாந்த் சொல்லும் போது ரொம்பவே வியப்படைகிறார். 

அவர் கூறுகையில், எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப எளிமையானவர் தான் விஜய்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. படத்தில் அவரோட டெடிகேஷன், அந்த கடின உழைப்பு என்னை பிரமிக்க வச்சிருக்கு. நெருடல் இல்லாத நடிப்பு, சின்சியாரிட்டி தான் விஜய்யை இந்த அளவிற்கு கொண்டு போயிருக்குன்னு நினைக்கிறேன். நண்பன் படத்தில் அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தை தந்தது. "என் ப்ரெண்ட போல யாரு மச்சான்..." என்ற பாட்டை கிட்டத்தட்ட 25 வருஷ பழைய வாட்டர் டேங்கில் வைத்து சூட் பண்ணினோம். அங்கு சூட்டிங் நடந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. படத்தோடு முதல் சாங்கும் அதுதான். கிட்டத்தட்ட 14நாட்கள் சூட்டிங் நடந்தது. சூட்டிங் ஆரம்பிக்கும் வரை ரொம்ப அமைதியா இருப்பார் விஜய், ஆனால் சூட்டிங் ஆரம்பிச்சுட்டா அந்தகாட்சியில் பின்னி எடுத்திடுவார். ரொம்ப ஹோம்வொர்க் பண்ணக்கூடியவர். அதனால் விஜய்யை பார்க்கும் போதெல்லாம் ரொம்ப வியந்து பார்ப்பேன் என்கிறார்.

டைரக்டர் ஷங்கரை பற்றி பேசிய ஸ்ரீகாந்த், கடும் உழைப்பாளி அவர். பாட்டையை படமா எடுக்க கூடியவர். ரொம்ப ப்ரெண்ட்லி டைப். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நண்பன் படம் எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்திருக்கு. அகில், அஹானா என்று எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. என் பெண் குழந்தைக்கு வரும் 28ம் தேதி முதல் பிறந்தநாள். அதை நல்லபடியாக கொண்டாடப்போறேன். இந்த 2012ம் வருஷம் எனக்கு நல்ல தொடக்கமாக இருக்கும், அதற்கு நண்பன் படமும் எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது என்றார்.

4 comments:

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

தங்கம் பழனி said...

சினிமா செய்தி!