சச்சினுக்கு கவுன்சிலிங் தேவை

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு கவுன்சிலிங் தேவைப்படுவதாக முன்னள் பாகிஸ்தான் அணி கேப்டன் ரஷீத் லத்திப் கூறியுள்ளார். இது குறித்து அவர், 100வது சதம் காரணமக அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மனரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க அவர் சைகாலஜீஸ்ட்களிடம் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு நெருக்கடி உள்ளதில் சந்தேகம் இல்லை. கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது குறித்து அவர் தவறான எண்ணம் கொள்ளக்கூடாது எனவும் கூறினார். மேலும் அவர் இந்த தொடரில் அவர் 100வது சதத்தை எட்டுவார். உலகில் உள்ள பல முன்னணி தடகள வீரர்கள் கவுன்சிலிங் எடுத்துக்கொண்டுள்ளனர் எனவும் கூறினார்.

No comments: