கே.வி.ஆனந்த இயக்கிய ' கோ ' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் சிம்பு. ஆனால் பல்வேறு காரணங்களால் சிம்பு படத்திலிருந்து விலகிக் கொள்ள அப்படத்தில் ஜீவா நடித்தார்.
அதன் பின், ஜீவா சிம்பு இருவருமே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசினர். இதனால் இருவரும் எதிரும் புதிருமாகி விட்டனர் என ரசிகர்களிடையே கருத்து பரவியது.
இந்நிலையில், சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் 'நண்பன்' டிரெய்லர் குறித்து " நண்பன் படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்காதது குறித்து வருத்தம் அடைகிறேன். ஷங்கர் சார் மற்றும் விஜய் அண்ணா இருவரோடும் பணியாற்றும் வாய்ப்பை தவறியதில் வருத்தம். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருமே அழகாக இருக்கிறார்கள். " என்று தெரிவித்துள்ளார்.
அதோடு நேற்று (ஜனவரி 4) ஜீவாவின் பிறந்தநாள் அன்று டிவிட்டர் இணையத்தில் சிம்பு " பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதர்.. 'நண்பன்' டிரெய்லர் அருமையாக இருக்கிறது. நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள். படம் வெற்றியடைய வாழ்த்துகள் " என்று தெரிவித்துள்ளார்.
சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்துக்கு ஜீவா " வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கு டிரெய்லர் பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
0 Comments