எனக்கு ஊக்கம் அளித்தது சச்சின் -ராகுல் டிராவிட்

சோதனையான கால கட்டங்களில் எனக்கு ஊக்கம் அளித்து என்னை தேற்றியவர் சச்சின் டெண்டுல்கர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்களில் மிகவும் சீனியர் டிராவி ட் தான். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் 39 -வது வயதை கடக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் இருக் கிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் என்ற பெ ருமையை டிராவிட் தான் பெற்று உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக அவர் அடுத்தடுத்து சதங் கள் விளாசியுள்ளார்.  ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் தான் அவருக்கு கடைசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலியாவில் கோப் பையை வெல்ல வேண்டும் என டிராவிட் உறுதியுடன் இருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கூறுகையில்,

 
எனது ஆட்டத்தின் திறன் திடீரென பாதிக்கப்பட்ட போது, கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்போது சச்சின் எனக்கு ஊக்கம் அளித்தார். அது எனக்கு உற்சாக டானிக்காக இருந்தது. அது தான் என்னை அதிக ரன் குவிக்க தூண்டி யது. நான் சேவாக் போன்று ஆடுவது கிடையாது. எனது பாணியில் வழக்கம் போல ஆடுகிறேன். ரன் குவிப்பதற்கான வழிகளை தேடிய பிறகே அதில் பயணிப்பேன். கடந்த கால அனுபவங்கள் எனது பேட்டிங்கின் போது உதவுகிறது. இவ்வாறு பெங்களூர் வீரரான டிராவிட் கூறியிருக்கிறார். ஆரம்ப கால கட்டத்தில் டிராவிட் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி களில் விளையாடினார். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அவர் ஜொ லிக்க வில்லை. தவிர, மற்றமுனையில் ஆடும் வீரரை அடிக்கடி ரன் அவுட்டாக்கி விடுவார் என்ற குற்றச்சாட்டிற்கும் ஆளானார். இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் டிராவிட் நிலைத்து நின்று ஆடக் கூடியவர். எனவே டெஸ்ட்  போட்டி தான் அவருக்கு லாயக் கான போட்டியானது. சேவாக் போன்று இவர் எல்லா பந்துக ளையும் அடிக்க மாட்டார். தேர்வு செய்து சரியான பந்துகளை மட்டும் தான் தொடுவார்.

Post a Comment

0 Comments