2010 ஆண்டு இறுதியில் வெளிவந்த ' வெங்கட்ராம் காலண்டர் 2011 ' திரையுலகினர் பலரின் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் அது பொதுமக்களுக்கு விற்பனைக்கு வராமல் இருந்தது. தற்போது 2012 ஆண்டு காலண்டரை தயார் செய்து இருக்கிறார் வெங்கட்ராம்.
அக்காலண்டரின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் இன்று (டிசமபர் 26) நடைபெற்றது. சூர்யா, சமீரா ரெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், தரணி, குஷ்பு மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சூர்யா காலண்டரை வெளியிட சமீரா ரெட்டி பெற்றுக் கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் வெங்கட்ராம் பேசும்போது " 2010 அக்டோபர் மாதம் எனக்கு காலண்டர் ஷுட் பண்ணலாம் என்று யோசனை தோன்றியது. உடனே VINTAGE CARS COLLECTION என்கிற Theme-ல் முழு காலண்டரை வடிவமைத்தேன்.
நவம்பர் மாதம் வரை பார்க்கலாம் எந்த நடிகர், நடிகை எல்லாம் ஒத்துழைக்கிறார்கள் என்று நினைத்து தான் ஆரம்பித்தேன். ஆனால் நான் நினைத்தை விட அனைவரும் எனக்கு அவர்களது வேலைகளை விட்டு எனக்கு நேரம் ஒதுக்கினார்கள்.
2011 காலண்டரை 6 நாயகிகள், 6 நாயகர்கள் கொண்டு வடிவமைத்து இருந்தேன். அந்த காலண்டர் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் இம்முறை இந்த 2012 காலண்டர் விற்பனைக்கு டிசம்பர் 30ம் தேதி முதல் ODESSEY கடைகளில் கிடைக்கும்.
2012 காலண்டரை முழுக்க முழுக்க 12 நாயகிகள் கொண்டு வடிவமைத்து இருக்கிறேன். இம்முறை வண்ணங்களை Theme-ஆக எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு நடிகைக்கும் தனித்தனி நிறங்களைத் தேர்வு செய்தோம். அதற்கு ஏற்றாற்போல பின்புலம், பொருட்கள், உடைகள் போன்றவற்றை தயார் செய்தோம். இந்த ஃபோட்டோக்களில் நடிகைகள் எல்லோருமே மிக அழகாக இருக்கிறார்கள்.
இம்முறை காலண்டர் ஷுட் அனைத்துமே ஸ்டூடியோவிற்குள் முடித்துவிட்டேன். ஜெனிலியா, சமீரா ரெட்டி இருவருக்கு மட்டும் மும்பைக்கு சென்று ஷுட் செய்தோம். மற்ற அனைவரது ஷுட்டிங்கும் சென்னையில் தான் நடைபெற்றது.
இந்த காலண்டர் நன்றாக வந்ததற்கு என்னோடு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக கலாண்டரில் இருக்கும் சமந்தா, ஜெனிலியா, த்ரிஷா, ரிச்சா, ஸ்ரேயா, சமீரா, ப்ரியா ஆனந்த், தீக்ஷா சேத், எமி ஜாக்சன், அமலா பால், மம்தா மோகன்தாஸ், காஜல் அகர்வால் அனைவருக்கும் நன்றி." என்று கூறினார்.
சூர்யா பேசும்போது " நான் வெங்கட்ராம் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறேன். போனமுறை காலண்டர் ஷுட்டிற்கு கூப்பிட்டாரே.. என்ன இம்முறை இன்னும் போன் வரவில்லை என்று யோசித்தேன்.
போன் செய்தேன், மெசேஜ் அனுப்பினேன் எதற்குமே ரெஸ்பான்ஸ் இல்லை. APPLE iPhoneல் மூலமாக அவருடைய போன் எந்த RANGEல் இருக்கிறது என்று பார்த்தேன். அது வெவ்வேறு ஊர்கள் காட்டியது. அப்போதே முடிவு செய்து விட்டேன். இம்முறை நாம் இல்லை என்று.
இருந்தாலும் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். எனக்கு திருப்புமுனையாக அமைந்த 'காக்க காக்க' படத்தில் துவங்கி எனது படங்களின் FIRST LOOK-ஐ தீர்மானித்து வருகிறார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். " என்று தெரிவித்தார்.
0 Comments