டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி

2010-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 6 வாரத்துக்குள் தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2010-ம் ஆண்டு தேர்வில் வெற்றிபெற்றிருந்தவர்களுக்கு அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 6 வாரத்துக்குள் தனித்தனியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும் விஏஓ தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

No comments: