தமன்னா பார்ட்டியில் தனுஷ் கொலவெறி

                      நட்சத்திர ஹோட்டல் பாரில் உற்சாக பான விருந்துடன் நடிகை தமன்னா தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். அந்த விருந்தில் பங்கேற்ற நடிகர் தனுஷ் கொலவெறிடி பாடலை உற்சாகமாக பாடி அசத்தினார். கையில் மது கின்னத்துடன் தமன்னாவும், தனுஷ¨ம் ஆட்டம் போட்ட அந்த வீடியோ காட்சிதான் யூடியூப்பில் ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் நடந்துள்ளது. இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு, கொலவெறி பாட்டைப் பாடியுள்ளார் அந்த பாடலுக்கு சொந்தக்காரரான தனுஷ். அவருடன் அந்தப் பாட்டுக்கு, ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும்,

                                  இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களை சுற்றியிருப்பவர்களும் மது அருந்தியபடி உற்சாகமாக ஆட்டம் போடும் அந்த வீடியோதான் யுட்யூபிலும், பேஸ்புக்கிலும் இப்போது ஹாட்டான டாபிக்! 
______________________
 karurkirukkan.blogspot.com
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
karurkirukkan.blogspot.com
___________________________

3 படத்தில் தனுஷ் எழுதி பாடியுள்ள ஒய் திஸ் கொலை வெறிடி பாடல் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறது. மொழியே தெரியாத மும்பைவாசிகள்கூட இந்த பாடலை முணுமுணுக்கிறார்களாம்.

அந்த வகையில் சமீபத்தில் மும்பையிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்ள சர்ச்கேட் ரயில் நிலையத்தில் தனுஷ் இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டார்களாம் ரசிகர்கள்.அதோடு கொலைவெறிடி பாடலை பாடிக்காட்டும்படியும் அன்பு வேண்டுகோள் விடுத்தார்களாம். இதனால் சில நிமிடங்கள் அந்த பாடலை பாடி அவர்களை சந்தோசப்படுத்தி விட்டே அங்கிருந்து விடைபெற்றிருக்கிறார் தனுஷ்.



 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Post a Comment

0 Comments