ஜோஸ் அலுகாஸ் நிறுவனத்துக்கு பிஸ்கஸ்ட் கொடுத்த சூர்யா!

இந்தியாவின் பிரபல கன்பெக்‌ஷனரி நிறுவனமான சன் பீஸ்ட் பிஸ்கட்ஸ் நிறுவனத்துக்கு

கடந்த 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் விளபரத்தூதராக இருந்தார் சூர்யா. தற்போது விஜய் டிவியில் பொங்கல் முதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘ஒரு கோடி’ என்ற கேம் ஷோவில் முதலில் விஜய்க்கு ஒரு கோடி சம்பளம் பேசி அழைக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்சியை விஜய் பிராண்ட் அம்மாசிடராக இருக்கும் ஜோஸ் அலுகாஸ் நகைக்கடையை முதன்மை ஸ்பாண்சராக பேசியிருகிறார்கள்.
ஆனால் விஜய் கடைசிநேரத்தில் முல்லை பெரியாறு பிரச்சனை தீவிரமாகும்போது, மலையாள நகைக்கடை விளபரத்துடன் கேம் ஷோவை ஆங்கர் செய்தால் சரியாக இருக்காது என்று விலகியிருகிறார்.
இந்த கேம் ஷோவுக்கு ஆரம்பம் முதலே நான் தயார் என்று சொல்லிக்கொண்டிருந்தாராம் சூர்யா. நல்லதாப் போச்சு என்று முதல் ஐந்து எபிசோட்களை படம்பிடிக்க விஜய் டிவி தயாரான போது  சூர்யா செய்த அதிரடி, “ இந்த நிகழ்சிக்கு பிஸ்கட் கம்பெணியை மெயின் ஸ்பான்ஸராகப் போடுங்கள்” என்பது.
வேறு வழியில்லாமல் டிவியும் பிஸ்கட் நிறுவனத்தையே மெயின் ஸ்பான்ஸர் ஆக்கி விட்டார்களாம். ஸ்பான்ஸர் விஷயத்தில் சூர்யா ஆர்வம் காட்டியதற்கு காரணம், விஜயின் பிராண்ட்க்கு நாம் எந்த வகையிலும் பூஸ்டாக அமைந்து விடக்கூடாது என்பதுதான். இதனால் தற்போது நகைக்கடை நிறுவனத்துக்கு சூரியாவுடன் சேர்ந்து பிஸ்கட் கொடுத்து விட்டார்கள் சூரியாவும், விஜய் டிவியும் என்கிறார்கள் மக்கள் தொடர்பாளர் வட்டத்தில்.
**********************************************************************************************

Surya Workouts at Gym - Latest Photos

1 comment:

Anonymous said...

evarukku vaazhva koduthathey vijaythaan