ஸ்ரேயா - ரீமாவுடன் ஆடிய அனுபவம்

`ராஜபாட்டை படத்தில், ஸ்ரேயா-ரீமாசென் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஆடிய அனுபவம் சூப்பரானது என்று நடிகர் விக்ரம் கூறியிருக்கிறார். விக்ரம் கதாநாயகனாக நடித்த `ராஜபாட்டை படம், சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி விக்ரம், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஸ்ரேயா, ரீமா சென்னுடன் ஒரே நேரத்தில் ஆடியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், படத்தில் ஸ்ரேயா, ரீமாசென் ஆகிய இருவருடனும் ஒரேநேரத்தில் ஆடிய அனுபவம் ஜாலியாகவும், சூப்பராகவும் இருந்தது. அந்த பாடல் காட்சியை இத்தாலியில் படமாக்கினார்கள். அங்கே பயங்கர குளிர். எனக்கு, `கோட்டு கொடுத்தார்கள். ஸ்ரேயா, ரீமாசென் இருவருக்கும் குறைந்த உடை கொடுத்திருந்தார்கள். `மைனஸ் டிகிரி குளிரில், ஸ்ரேயாவும் ரீமாவும் ரொம்ப சிரமப்பட்டார்கள். ஒவ்வொரு `ஷாட்` முடிந்ததும் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். என்னை அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். ஒரு பக்கம் வருத்தமாகவும், இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது, என்றார்.

No comments: