The Hangover Part II 31.6 மில்லியன் டாலர் வசூலை வாரிக் குவித்துள்ளது


 இந்தவாரம் வெளியாகிய ஹாலிவூட் திரைப்படங்களில் The Hangover Part II, முதல்நாள் தியேட்டர் வசூலில் பிரமிக்க வைத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (மே, 26ம் தேதி) அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்பட்டு, அன்றைய தினமே 31.6 மில்லியன் டாலர் வசூலை வாரிக் குவித்துள்ளது.

அமெரிக்காவிலும் புதிய திரைப்படங்கள் வெள்ளிக் கிழமைகளியேயே வெளியாவது வழக்கம். The Hangover Part II, கடந்த வியாழக் கிழமை வெளியாகியதன் காரணம், அமெரிக்காவில் (மெமோரியல் டே) விடுமுறை வாரமாக அமைந்திருப்பதால்தான். வரும் திங்கட்கிழமையும் அங்கு விடுமுறை.

ஹாலிவூட் தியேட்டர் வசூல் கணிப்பீடுகளில், வெவ்வேறு பிரிவுகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு, வெவ்வேறாகக் கணிப்பீடு செய்வது வழக்கம். The Hangover Part II, வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவை (R-rated comedy flicks) என்ற பிரிவில் வருகின்றது.இந்த வகையில் The Hangover Part II, முதல்நாள் தியேட்டர் வசூலில் இதுவரை இருந்த சாதனை வசூலை முறியடித்துள்ளது. வயதுவந்தவர்களுக்கான நகைச்சுவை திரைப்படப் பிரிவில், அதியுச்ச முதல்நாள் வசூல் சாதனையை வைத்திருந்த திரைப்படம் – Sex And The City.
2008ல் வெளியாகிய Sex And The City திரைப்படத்தின் முதல்நாள் வசூல், 26.7 மில்லியன் டாலர்கள்.
The Hangover Part II, இந்த வார பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக இருக்கும் என்றே கணிப்பிடப்படுகின்றது. வார இறுதி வசூலாக (வெள்ளி – ஞாயிறு) 85 மில்லியன் டாலரைப் பெற்றுக்கொள்ளும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமையும் விடுமுறை என்பதால், வியாழன் முதல் திங்கள் வரையிலான 5 நாள் மெமோரியல் டே விடுமுறையின் முடிவில் எதிர்பார்க்கப்படும் வசூல், 125 மில்லியன் டாலர்கள்.

ரசிகர்களின் கருத்து எப்படி? பாஸ்டன் குளோப் கருத்துக் கணிப்பில், பலர் The Hangover முதல் பாகம் அளவுக்கு சுவாரசியமானது அல்ல என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், ஆரம்ப ஊடக விமர்சனங்கள் பாஸிட்டிவ்வாகவே அமைந்திருக்கின்றன.

Post a Comment

0 Comments