ஏசு சிலை நிறுவி எண்பது ஆண்டுகள்


பிரேசில் நாட்டின் மிகவும் அறியப்பட்ட மீட்பர் ஏசுவின் சிலை அமைக்கப்பட்டு 80 ஆண்டுகள் ஆகின்றன.ரியோ டி ஜெனிரோவிலுள்ள இந்தச் சிலையின் 80 ஆண்டுகளை குறிக்கும் நோக்கில், அது அமைந்துள்ள கொக்கோவடா மலைக் குன்றில் சிறப்பு பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.
குவானபரா வளைகுடாவை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ள மீட்பர் ஏசுவின் சிலை பிரேசிலின் மிகவும் அறியப்பட்ட ஒரு இடமாக திகழ்கிறது.உலகெங்கிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் மீட்பர் ஏசுவின் சிலையை தரிசிக்க சுமார் இருபது லட்சம் மக்கள் வருகிறார்கள். பதினைந்து மாடிகள் அளவுக்கு உயரமான இந்த ஏசுபிரானின் திருவுருவச் சிலை, ரியோ டி ஜெனிரோவிலுள்ள கொக்கோவ்டா மலைக் குன்றின் உச்சியில் 1931 ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நிறுவப்பட்டது முதல் மக்களால் தரிசிக்கப்பட்டு வருகிறது.
அந்தச் சிலைக்குள் சென்று பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், அதன் அடிவாரத்திலிருந்து பார்த்தால் உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்று எனக் கருதப்படும் ரியோ டி ஜெனிரோவின் முழுப் பார்வையும் தெரியும்.பிரேசில் நாட்டின் பொறியிலாளர் ஒருவரின் திட்டத்தில் பிரெஞ்சு சிற்பி மீட்பர் ஏசுவின் சிலையை உருவாக்கினார். இதற்கான நிதி பிரேசில் நகரவாசிகளால் ரியோ டி ஜெனிரோவின் மறைமாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

இந்தச் சிலை நிறுவப்பட்டு எண்பது ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், ரியோவின் மறைமாவட்டம் அந்த மலைகுன்றி
உச்சியில் சிறப்புப் பிரார்தனை ஒன்றை நடத்தியது.
மேலும் எட்டு மீட்டர் அகலம் கொண்ட ஒரு சிறப்பு கேக்கும் வெட்டப்பட்டது. இதற்கு அப்பால், மீட்பர் ஏசுவின் சிலை அமைந்திருக்கும் கடற்கரையில் மிகப் பெரிய இசை நிகழ்ச்சி அரசின் அனுசரணையுடன் நடைபெற்றது.700 மீட்டர் உயரம் கொண்ட கொக்கோவ்டா மலைக் குன்றில் அமைந்திருக்கும் இந்தச் சிலையை ஆன்மீகக் காரணங்களுக்காகவும், சுற்றுலாவுக்காகவும் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து பார்க்கிறார்கள். மலையடிவாரத்திலிருந்து சிலையைச் சென்றடைய பார்வையாளர்கள் சுமார் 200 படிகள் ஏற வேண்டும்.கடந்த 2007 ஆம் ஆண்டு உலகெங்கும் நவீன உலக அதிசயங்கள் ஏழு எவை என்பதை கண்டறிய நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கனிப்பில் மீட்பர் ஏசு சிலையும் பங்கு பெற்று வெற்றி பெற்றது.

1 comment:

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html