43 புதிய திட்டங்கள் முதல்வர் ஜெ

by 9:23 AM 0 comments
* கோவையில் உள்ள மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தியமங்கலம் சாலைகள் மேம்படுத்தப்படும்.
 *  உக்கடம், ஆத்துப்பாலம், வடக்கு சுற்றுச்சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.
 *  ராமநாதபுரம் மாவட்டம் ஆழ்கடல் மீன்பிடிப்பு இனி, டோக்கன் முறை மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அனுமதிக்கப்படும்.
 *  அரியலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள 42 கி.மீ. நீளமுள்ள சாலை சீரமைக்கப்படும்.
 *  கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் சாலைகள் அமைப்பது தொடர்பாக அந்த மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
 *  ஈரோடு மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
 *  ஈரோடு மாவட்டம் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே சாலை விரிவுபடுத்தப்படும்.
 *  காரமடை வழியாக உதகைக்குப் புதிய வழித்தடம் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
 *  தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சரக்கு முனையம் அமைக்கப்படும்.
 *  பெரியகுளம் - கொடை ரோடு சாலையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்படும்.
 *  நாகப்பட்டினத்தில் மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
 *  பொன்னேரி வருவாய் கோட்டம் பிரிக்கப்பட்டு, அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் அமைக்கப்படும். அதில், அம்பத்தூர், மாதவரம் தாலுகாக்கள் இருக்கும்.
 *  சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
 *  திருவண்ணாமலையில் நடைபெறும் மகாதீப திருவிழாவுக்கு மாநில அரசின் பங்கான 50 சதவீதம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.
 *  சித்ரா பௌர்ணமி தினம் மதப் பண்டிகையாக அறிவிக்கப்படுகிறது.
 *  வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
 *  வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 *  பட்டாசு ஆலைகளில் பணியாற்றுவோருக்கான பயிற்சி முகாம், சிவகாசியில் அமைக்கப்படும்.
 *  நாமக்கல் புறநகர்ப்பகுதியில் பஸ் கட்டுமானத்துக்கான பிரிவு தொடங்கப்படும்.
 *  கடலில் மீனவர்கள் காணாமல் போகும் நேரங்களில் தேவையின் அடிப்படையில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்படும்.
 *  தேடுதல் பணியில் ஈடுபடும் கடலோர போலீஸôருக்கு அதிவேக படகுகள் வழங்கப்படும்.
 *  தூத்துக்குடி நகருக்கு கூடுதல் தண்ணீர் அளிக்கப்படும்.
 *  தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்.
 *  தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
 *  பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் பயிற்சி சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்படும். அந்தக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும்.
 *  எஸ்.எம்.எஸ். முறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர்களின் வருகை பதிவு கணக்கிடப்படும்.
 *  கடலூர் மாவட்டத்துக்கென ஒரு பெருந்திட்ட வளாகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 *  புதிதாக கட்டப்படும் அரசு விடுதிகளில் சூரிய மின் சக்தி அமைப்புகள் நிறுவப்படும்.
 *  மேட்டூர் அணையில் இருந்து ஜூனில் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக, அங்குள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிக்கான நிர்வாக ஒப்புதல் ஜனவரியிலேயே அளிக்கப்படும்.
 *  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் சீராகச் செல்லும் வகையில் ஒருங்கிணைந்த அளவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
 *  தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு இணைப்புச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மலைப்பகுதியில் சுற்றுலா தலமாக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கும்.
 *  கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக் கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அங்குள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்து, மாம்பழக் கூழுடன் பால் சேர்த்த கலவையை மதிய உணவுத் திட்டத்தில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் மேற்கொள்ளும்.
 *  அரியலூர் மாவட்டம் மருதயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
 *  மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் அனைத்து கால்வாய்களையும் பராமரிக்கும் பணி தொடங்கப்படும். அணை ஜுனில் திறக்கப்படும் போது, அவை நல்ல முறையில் இருப்பதற்கு வழி செய்யப்படும்.
 *  தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் சிறிய வெங்காயத்தையும் சேர்த்து, அவற்றை பயிரிடும் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
 *  பெரம்பலூர் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனை சந்தை அமைக்கப்படும்.
 *  திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன்மூலம், 60 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருவது தவிர்க்கப்படும்.
 *  மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயதின் அளவு 45-லிருந்து 18 ஆகக் குறைக்கப்படும்.
 *  அனைத்து மாவட்டங்களிலும் சட்டப் பிரச்னைகளை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு தனி உதவியாளர் நியமிக்கப்படுவார்.
 *  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிரிண்டருடன் இணைந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
 *  தூத்துக்குடி மாவட்டம் கோரப்பள்ளம் கண்மாய் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.
 *  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் பெரிய அளவில் உள்ளன. எனவே, அவை மறுசீரமைப்பு செய்யப்படும்.
 *  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ளும். 

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: