ரஜினிகாந்த் லேட்டஸ்ட் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியை, அவரது நண்பரும் நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு சமீபத்தில் சந்தித்தது நினைவிருக்கலாம்.இந்தச் சந்திப்பின்போது ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பின்னர் வெளியிடுவதாக லட்சுமி மஞ்சு தெரிவித்திருந்தார். அந்தப் படம் இப்போது வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சையில் குணமடைந்த பிறகு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி.

ரஜினி முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என்றும் ராணா படத்தை நிறுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாயின. ராணா வரலாற்று படம் என்பதால் கத்திச் சண்டை போடுவது, குதிரையேற்றம் போன்ற காட்சிகளில் ரஜினியால் நடிக்க இயலாது என்றும் கூறப்பட்டது. அண்ணாமலை, படையப்பா மாதிரியான கதையை தயார் செய்யும்படி ரஜினி அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இதனை மறுத்தார்.

'ராணா' படம் நிறுத்தப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் கூறினார். ரஜினி வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு அவரது அதிகாரப்பூர்வ படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அவர் எப்படி இருக்கிறார் என்று அறிய முடியாமல் இது போன்ற சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

தற்போது முதல் தடவையாக பூரண குணமடைந்த ரஜினியின் அதிகாரபூர்வ படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லட்சுமி மஞ்சு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு தனது தசரா பரிசு எனக் கூறி வெளியிட்டுள்ளார் லட்சுமி!

No comments: