வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு மற்றும் மோசமான தரத்தில் உள்ள தொழில்கள் காரணமாக ஒரு தலைமுறை இளைஞர்கள் பெரும் அச்சநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலகெங்கும் ஏழரைக் கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வளர்ந்துவரும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குறைந்த ஊதியம் தரும் தொழில்களில் அகப்பட்டிருக்கிறார்கள்.
1 Comments