விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கிலாந்தில் உள்ள தாம்சன் ஏர்வேஸ் என்ற தனியார் நிறுவனம் தனது பயணிகள் விமானத்தை சமையல் எண்ணை மூலம் இயக்கி சாதனை படைத்துள்ளது. `போயிங் 757' ரக விமானத்தில் 2 என்ஜின்கள் உள்ளன. அவற்றில் ஒரு என்ஜின் பெட்ரோல் மூலம் இயக்கப்பட்டது.
மற்றொரு என்ஜின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மூலம் இயங்கியது. அதற்காக வீடுகளின் சமையலறைகள் மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட சமையல்எண்ணைகள் சேகரிக்கப்பட்டன. அவை அதிநவீன முறையில் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இந்த விமானம் பர்மிங்காமில் இருந்து லான்ஷோரக் நகருக்கு கடந்த வாரம் இயக்கப்பட்டது. அதில் 232 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணம் செய்தனர்.
உலகிலேயே முதன் முறையாக சமையல் எண்ணை மூலம் விமானத்தை இயக்கி சாதனை படைத்ததை பெருமையாக கருதுவதாக தாம்சன் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2012-ம் ஆண்டில் விமானங்கள் முழுவதையும் சமையல் எண்ணை மூலம் இயக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
3 Comments
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com