கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதன் மூலம் மூளை புற்றுநோய் ( பிரெய்ன் கேன்சர்) வர வாய்ப்பில்லை என்று இது குறித்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
டென்மார்க்கில் வசிக்கும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேரிடம் சுமார் இருபது ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கும் அதிகாக கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்கும், அவ்வகையில் கைத்தொலைபேசி உபயோகிக்காதவர்களுக்கும் இடையே மூளை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஒரே அளவில்தான் உள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செல்போன் பயன்பாட்டால் மூளை பாதிப்பு வரும் என்று பரவலாக நம்பப்படும் ஒரு சூழலில் இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
இந்த ஆயவு முடிவு பொதுமக்களையும், அதிகாரத்தில் இருப்போரையும் தவறாக வழி நடத்திச் செல்லக் கூடும் என்று பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தைச் சேரந்த பேராசிரியர் டேனிஸ் ஹேன்ஷா எச்சரித்துள்ளார்.
0 Comments