லிபியாவின் அதிபர் கடாபி கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

by 2:27 PM 0 comments

[Note:இதில் வரும் வீடியோ காட்சிகளை குழந்தைகள் , பலவீனமான இதயம் உள்ளவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்]

&&&&&&&&&&&&&&&&&&&&&
யார் இந்த கடாபி ?

லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபி ஓர் சர்வாதிகாரி. இவரது முழுப்பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், இத்தாலியின் கட்டுப்பாட்டில் லிபியா இருந்த போது, பிறந்தார். இவரது பள்ளிப் பருவத்தில், உலகில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக புரட்சி நடைபெற்று வந்தது. 1952ல் எகிப்து புரட்சியின் போது காமல் அப்துல் நாசர் என்பவர் அதிபர் பதவியை கைப்பற்றினார். இவரது போராட்டத்தால் கடாபி ஈர்க்கப்பட்டார். 1956ல் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் கடாபி பங்கேற்றார். 1961ல் பெங்காசியில் உள்ள லிபிய ராணுவ அகடமியில் சேர்ந்தார். 1966ல் படிப்பை முடித்தார். மேற்படிப்பை ஐரோப்பியாவில் முடித்தார். பின், லிபிய ராணுவத்தில் சேர்ந்தார். 1969, செப்., 1ல் இளம் ராணுவ அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை தனது தலைமையில் திரட்டினார். 
                        அப்போது லிபிய மன்னராக இருந்த இத்ரிஸ், மருத்துவ சிகிச்சைக்காக துருக்கியில் இருந்தார். அவருக்கு பதிலாக அவரது மருமகன் பொறுப்பில் இருந்தார். கடாபி தலைமையிலான ராணுவ குழு, அவரை வீட்டுக்காவலில் அடைத்து ஆட்சியை பிடித்தது. கடாபி, லிபியாவின் முதல் அதிபராக பதவியேற்றார். பதவியேற்றவுடன், அமெரிக்கா, பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு லிபியாவில் தடை விதித்தார். 1970ல், இத்தாலியில் இருந்து குடியேறியவர்களை கடாபி வெளியேற்றினார். 1972ல், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, பாலஸ்தீனத்துக்கு நிதி மற்றும் ராணுவ உதவி வழங்கினார். 1995ல் இஸ்ரேலிய - பாலஸ்தீன அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, லிபியாவில் இருந்த 30 ஆயிரம் பாலஸ்தீனியர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பினார். 

சீன உதவியுடன் அணு ஆயுதம் மற்றும் ராணுவ ஆயுதங்களை பெருக்க திட்டமிட்டார். 2011, பிப்., 17ல் கடாபியை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும், லிபிய ராணுவத்துக்கு எதிராக குண்டு மழை பொழிந்தன. இதில் கடாபியின் ஏழாவது மகன் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆறு மாதங்களாக தொடர்ந்த நேட்டோ படை தாக்குதலில் நேற்று கடாபி சுட்டுக்கொல்லப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள், ஏழு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். **********************************************************************


கடந்த 69ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 42 ஆண்டுகள் வரையில் லிபியாவின் அதிபராக பதவிவகித்த கடாபி நேற்று புரட்சி படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். பதுங்கு குழியில் பதுங்கி இருந்த அவரை உயிருடன் பிடித்த கிளர்ச்சியாளர்கள், பின்னர் கொடூரமாக கொலை செய்ததாக தெரிகிறது. இதற்கு ஆதாரமாக சில வீடயோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.


புரட்சி: அதிபர் பதவி விலக கோரி கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. உள்நாட்டில் புரட்சி படைகள் தவிர நேச நாடுகளும் அதிபர் பதவியை விட் டு கடாபி விலகும் படி கோரிக்கை விடுத்து வந்தன. கோரிக்கைகளை ஏற்க மறுத்த கடாபி தன்னை எதிர்த்தவர்களை சுட்டுக்கொள்ளும்படி ராணுவத்தினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ராணுவத்தினருக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. புரட்சி படையினருக்கு ஆதரவாக நேசப்படையினரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கடாபி ஆதரவு படையினர் தலைநகர் டிரிபோலி உட்பட பல்வேறு முக்கிய நகரங்களை பறிகொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த தாக்குதல்களில் கடாபியின் மகன் மற்றும் கடாபியின் நெருக்கமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வீடியோ காட்சி வெளியீடு: கடாபி தன்னுடைய சொந்த ஊரில் தங்கியிருப்பதாக நேசபடைகளுக்கு தகவல்கிடைத்தது. இதனடிப்படையில் சிர்டி நகரில் தாக்குதல் நடத்திய நேசபடையினரின் ஒரு பகுதியினர் கடாபியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நகரின் சாக்கடை குழாய் ஒன்றில் கடாபி பதுங்கியிருப்தை கண்டறிந்தனர். தொடர்ந்து அவர் சாக்கடை குழாயிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் காக்கி உடைஅணிந்திருந்தார். புரட்சி படையினர் அவரை சாக்கடை குழாயில் இருந்து வெளியே அழைத்து வந்த போது சரண் அடைந்து விடுவதாகவும் சுட்டுக் கொல்ல வேண்டாம் என கெஞ்சுவதும் வீடியோவில் பதிவானது. கடாபியின் வேணடுகோளை ஏற்க மறுத்த புரட்சிக்காரர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

எப்படி இறந்தார்?: கடாபி பிடிபட்டபோது அவருடைய இடது தலைப்புறத்தில் காயம் இருந்ததும் அதிலிருந்து ரத்தம் வழிவதும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. அவர் நடந்து செல்லும் அளவுக்கு இருந்ததாகவும் வீடியோ காட்சிகள் கூறுகின்றன. அப்படி இருக்கையில் அவர் எப்படி இறந்தார்? அவர் பிடிபட்டதும் தப்பி ஓட முயன்றாரா? அல்லது கிளர்ச்சியாளர்கள் அவரைச் சுட்டுக் கொன்றனரா? அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், கடாபியின் தலையில் குண்டு காயம் இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் அந்த காயத்தால்தான் அவர் மரணம் அடைந்தாரா அல்லது அவரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்த பிறகு, தலையில் சுடப்பட்டாரா என்பது தெளிõகவில்லை.


குழப்ப நிலை: அதிபர் கடாபியை உயிருடன் பிடிபட்ட போது அவருடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர் என்றும், அதுமட்டுமல்லாமல் அவருக்கு நெருக்கமான வர்களும் உடன் இருந்தனர் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி இருப்பதால் அவருடன் இருந்தவர்கள் குறித்து குழப்ப நிலை நீடித்து வருகிறது. மேலும் கடாபியுடன் அவரது ஆலோசகர் அகமது இப்ராஹிம், உடனிருந்ததாக புரட்சிபடையினர் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னாள் ராணுவ அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் கடாபி பதுங்கியிருந்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

***************************************************************************************************


சுட்டுக் கொல்லப்பட்ட போது கடாபி தங்க துப்பாக்கி வைத்திருந்தார். தங்க துப்பாக்கி கடாபி தனது சொந்த ஊரான சிர்த் நகரில் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது, அவர் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கி பழுப்பு நிறத்தில் இருந்தது. அதை அவர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்.


பொதுவாக கடாபிக்கு தங்கத்தின் மீது அலாதி மோகம் உண்டு. இவர் தனது மாளிகையில் ஏ.கே.47 துப்பாக்கியை தங்கத்தினால் தயாரித்து வைத்திருந்தார். பாப் அல்-அஷிசியா நகரில் உள்ள தனது வீட்டில் ஆயுதங்கள் அனைத்தையும் தங்கத்தினால் செய்து பாதுகாத்து வந்தார். தனது `ஷோபா' இருக்கையை மக்லி ஆயிஷா முக தோற்றத்தில் `கடல்கன்னி' உருவத்தில் தயாரித்து இருந்தார். இவை அனைத்தும் புரட்சிப்படை வீரர்கள் கைப்பற்றியபோது வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இதேபோன்று தங்கத்தினால் ஆன ஆயுதங்களை ஈராக் அதிபர் சதாம் உசேனும் பயன்படுத்தி வந்தார். அவர் வழியை கடாபியும் பின்பற்றி உள்ளார்.  
ஸ்டாலின், ஹிட்லர் வழியை கடாபி பின்பற்றியுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட லிபியா அதிபர் கடாபி சோவியத் ரஷிய தலைவர் ஸ்டாலின், ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் ஆகியோர் தனது `ரோல் மாடல்' என்று கூறி வந்தார்.
 ரஷியாவில் முன்பு `ஜார்' மன்னர் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். மக்கள் ஆதரவுடன் புரட்சிபடை அமைத்து அவரது ஆட்சியை அகற்றி அங்கு கம்யூனிஸ்டு ஆட்சியை ஸ்டாலின் ஏற்படுத்தினார்.
இரண்டாம் உலக போரின் போது ஜெர்மனியை ஆண்ட அடால்ப் ஹிட்லர் `நாஜி' படை அமைத்து சர்வாதிகாரியாக இருந்தார். இவர்களது வழியை தான் கடாபியும் பின்பற்றினார்.
லிபியாவில் ஆட்சி செய்த `இத்ரிஸ்'' மன்னரின் ஆட்சிக்கு எதிராக புரட்சி நடத்தி ரத்தம் சிந்தாமல் ஆட்சியை கைப்பற்றினார். அதை தொடர்ந்து ஹிட்லர் வழியில் இரும்பு கரம் கொண்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். இது போன்று கடந்த 42 ஆண்டு காலம் பதவியில் இருந்தார். அவரது அடக்கு முறை பிடிக்காமல் வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தின் மூலம் கடாபி ஆட்சியை தூக்கி எறிந்தனர். இதை தொடர்ந்து தலை மறைவாக இருந்த அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  தனது பாதுகாப்புக்காக பெண்கள் படையை கடாபி அமைத்து இருந்தார். அவர்கள் அமேசான் படை என அழைக்கப்பட்டனர். அவர்கள் தான் இறுதி வரை தங்கள் தலைவரை (கடாபியை) பாதுகாத்து வந்தனர். தானே அரேபிய நாடுகளின் தலைவர் என கடாபி கூறி வந்தார். ஆப்பிரிக்க நாடுகளின் அரசர் என்றும், முஸ்லிம்களின் `இமாம்' (தலைவர்) என்றும் தெரிவித்தார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: