கரூர் மாவட்டத்தில் பெண்களுக்குமுதலிடம்

கரூர் மாவட்டத்தில் நடந்த முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காகிதபுரம் டவுன் பஞ்சாயத்தை தவிர மற்ற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.நேற்று முன்தினம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி உள்பட நான்கு பஞ்சாயத்து யூனியன் மற்றும் ஏழு டவுன் பஞ்சாயத்துகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. பஞ்சாயத்து யூனியன்களான கரூரில் 24 ஆயிரத்து 088 ஆண்களு ம், 25 ஆயிரத்து 839 பெண்களு ம், தாந்தோணியில் 24 ஆயிரத்து 936 ஆண்களும், 25 ஆயிரத்து 805 பெண்களும், அரவக்குறிச்சியில் 17 ஆயிரத்து 613 ஆண்களும், 34 ஆயிரத்து 941 பெண்களும், க.பரமத்தியில் 27 ஆயிரத் து 161 ஆண்களும், 53 ஆயிரத்து 401 பெண்களும் என மொத்தமாக 92 ஆயிரத்து 592 ஆண்களும், 96 ஆயிரத்து 482 பெண்கள் உள்பட ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 074 பேர் ஓட்டு போட்டுள்ளனர்.

டவுன் பஞ்சாயத்துகளான உப்பிடமங்கலத்தில் 3,403 ஆண்களு ம், 3,578 பெண்களும், புலியூரில் 3,629 ஆண்களும், 3,733 பெண்களும், புஞ்சை புகளூரில் 6,770 ஆண்களும், 13,079 பெண்களும், புஞ்சை தோட்டக்குறிச்சியில் 3,0 74 ஆண்களும், 3,321 பெண்களு ம், தமிழ்நாடு காகித ஆலையில் 1,647 ஆண்களும், 1,619 பெண்களும், பள்ளப்பட்டியில் 3,772 ஆ ண்களும், 7,468 பெண்களும்,அர வக்குறிச்சியில் 3,772 ஆண்களும், 3,445 பெண்கள் என 24 ஆ யிரத்து 884 ஆண்களும், 29 ஆயிரத்து 924 பெண்கள் உள்பட 54 ஆயிரத்து 808 பேர் ஓட்டு போட்டுள்ளனர். காகிதபுரம் டவுன் பஞ்சாயத்தில் மட்டும் பெண்களை விட 18 ஓட்டுக்களை ஆண்கள் அதிகமாக போட்டுள்ளனர்.கரூர் நகராட்சியில் 56 ஆயிரத்து 503 ஆண்களும், 60 ஆயிரத்து 536 பெண்கள் உள்பட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 039 பேர் ஓட்டு போட்டுள்ளனர். கரூர் நகராட்சயில் ஆண்களை விட பெண்கள் 4,033 பேர் அதிகமாக ஓட்டு போட்டுள்ளனர். 



"காலைக்கதிர்' நாளிதழில் ஏற்கனவே, கரூர் நகராட்சி தலைவர் பதவி பெண்கள் விரலில் என செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டிருப்பது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது வரும் 21 ம் தேதி தெரியவரும்.

Post a Comment

0 Comments