ஜெயலலிதா பிரதமர் ஆவார்: வெளிநாட்டு ஜோதிடர்


ஜெயலலிதா பிரதமர் ஆவார் என்று வெளிநாட்டு ஜோதிடர் கணித்துள்ளார்.   ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் டாடிச்சிடோத் விஸ்ட். இவர் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு தலைநகர் மணிலாவில் வசித்து வருகிறார். இசை வல்லுனரான இவர் ஜெர்மன் டாகுமெண்டரி படம் ஒன்றுக்கு இசை அமைத்துள்ளார்.
 
டாடிச்சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஜோதிடத்தின் மீது ஆர்வம் அதிகம். முகத்தை பார்த்தே ஒருவருடைய ஜோதிட பலன்களை கூறுவதில் டாடிச்சி வல்லவர். அவர் மனோதத்துவ நிபுணராகவும் திகழ்கிறார்.
 
முதல் - அமைச்சர் ஜெயலலிதா பற்றி டாடிச்சி ஜோதிட கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய அரசியலில் ஜெயலலிதா குறிப்பிடத் தகுந்த இடத்தை வெகு விரைவில் பிடிப்பார் என்று அவர் கூறியுள்ளார். ஜெயலலிதா மக்களை நன்றாக புரிந்து கொண்டவர். இந்தியாவின் பிரதமராகும் திறமை அவரிடம் உண்டு. அவர் இந்தியாவின் பிரதமர் ஆவார்.
 
இவ்வாறு டாடிச்சி ஜோதிடம் கூறியுள்ளார்.

No comments: