9 வயது மகளை ‘வேன்’ ஓட்டவைத்த குடிகாரர்

அளவுக்கு அதிகமாக குடித்ததால் நிலைதடுமாறிய தந்தை, தனக்குப் பதிலாக தனது 9 வயது மகளை வேன் ஓட்ட செய்தார். இந்த சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ‘ப்ரவுன்ஸ் டவுன் டவுன்ஷிப்’ என்னும் இடத்தில் நடந்தது. ஷான் வெய்மெர், 39 என்ற அந்த நபர் அதிக அளவில் மதுபானம் அருந்தியுள்ளார். அதன் பின் தள்ளாடியபடியே தன் வாகனம் நிறுத்தி இருந்த இடத்துக்கு சென்ற அவர் தன்னுடன் இருந்த தமது 9 வயது மகளை வேனை ஓட்ட பணித்துள்ளார். 


                                 இதனிடையே தனது தந்தையின் சொல்லை தட்டாத அவரும் வேனை ஓட்டத் தொடங்கினார். சாலையில் சிறுமி பெரிய வேனை ஓட்டிவருவதை கண்ட போலிஸ் அதிகாரிகள் அவர்கள் வண்டியை நிறுத்தினார். ஆனால் ஷானின் 9 வயது மகள் சற்றும் பதற்றம் அடையாமல் போலிசாரிடம் ஏன் எங்கள் வண்டியை நிறுத்தினீர்கள் என கேள்வி கேட்டாள். 


                                                “நான் நன்றாக தானே வண்டி ஓட்டுகிறேன். என் தந்தை குடித்துள்ளதால் அவரால் வாக னம் ஓட்ட முடியாது. அதனால் தான் நான் ஓட்டுகிறேன்,” என போலிசாரிடம் விளக்கம் அளித் திருக்கிறாள் அந்த சிறுமி. 9 வயது சிறுமி மிகவும் சரியாகவும், கவனமாகவும் வேனை ஓட்டியதாக போலிசார் பாராட்டினாலும், அந்த சிறுமியை வாகனம் ஓட்ட வைத்த செயலுக் காக சட்டத்தின் பிடியில் குற்ற வாளி ஆகி இருக்கிறார் தந்தை. ஷான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இதனால் ஷானின் மகள் தனது விடுமுறையை தனது தந்தையுடன் கழிக்க விரும்பியதால் அவரது தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார். ஷான் தனது மகளை குட்டி தேவதை என்றே அழைக்கிறார்.

No comments: