கவனிக்க : கரூர் பஸ் ஸ்டாண்டில் கஷ்டப்படும் பயணிகள்

கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பொதுமக்கள் தூர்நாற்றத்தை தாங்க முடியாமல் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்ட தலைநகரான கரூர் பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயில், கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு விதமான கடைகள் வைக்கப்பட்டுள்ளது. ஃபிளாட்பாரத்தில் பயணிகள் வெயில் மற்றும் மழைக்கு கூட ஒதுங்க முடியாமல் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிற்கும் பயணிகளை சில கடைக்காரர்கள் தகாத வார்த்தைகளால் பேசி விரட்டுவது நாள்தோறும் நடந்து வருகிறது.சில சமயங்களில் போக்குவரத்து போலீஸார் உதவியுடன் பகலில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்டுகிறது. ஆனால் இரவு நேரத்தில் மீண்டும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் முளைக்கிறது.

கரூர் பஸ் ஸ்டாண்ட் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் உள்ள கடைகளின் குப்பைகள், கழிவு பொருட்கள் ஆங்காங்கே நடுரோட்டில் கொட்டப்படுகிறது. இதனால் கரூர் பஸ் ஸ்டாண்ட் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.கரூரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், நீண்ட நாட்களாக உள்ள குப்பைகளில் இருந்து தூர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. மேலும் மினி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் பெரும் சுகாதார கேடு ஏற்படுகிறது.பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடங்கள் சரிவர சுத்தம் செய்யப்படாததாலும், ஆங்காங்கே சிலர் சிறுநீர் கழிப்பதாலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மலைபோல் தேங்கியுள்ள குப்பைகள், ஆறாக ஓடும் சிறுநீர், இறைச்சி கழிவுகளால், பொதுமக்களுக்கு இலவசமாக பல்வேறு நோயை பரப்பும் மையமாக கரூர் பஸ் ஸ்டாண்ட் மாறி வருகிறது.பொதுமக்கள் வசதிக்காக கரூர் பஸ் ஸ்டாண்டை அடிக்கடி சுத்தப்படுத்தி, குப்பைகளை நாள்தோறும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாவட்ட தலைநகரான கரூர் பஸ் ஸ்டாண்ட் இன்னும் ஒரு கூவமாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவறையை வெளியூரில் இருந்து வந்த ஒருவர் பயன்படுத்தினால் அதுவே அவரின் கடைசி கரூர் பயணமாகும் .மக்கள் அவ்வளவு துன்பத்துக்கு ஆளாகிறார்கள் . வெளியூர் செல்லும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் நிற்க கூட முடியவில்லை , சாலைகளில் சிறு நீர் வழிந்து ஓடுகிறது ,இத்தனைக்கும் கரூர் நகருக்கு வெளி ஊர்களில் இருந்து ஆயிரக்கனக்கான மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள் ,இதனை சரி செய்தால் தான் , கரூர் கம்பீரமாக காட்சி அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .

நன்றி
www.karurkirukkan.blogspot.com

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

No comments: