கோவையில் புதிய ஷோரூம் -ஆடி முடிவு


சொகுசு கார்களுக்கு புகழ்பெற்ற ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம், விரைவில் கோவையில் தனது கார் ஷோரூமை திறக்க திட்டமிட்டுள்ளது.ஆடி கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள ஆடி நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கப்பணிகளை விறு விறுவென மேற்கொண்டு வருகிறது.

மாநகரங்களில் மட்டும் ஷோரூம் அமைத்துள்ள ஆடி நிறுவனம் தனது வர்த்தகத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களுக்கும் விரிவுப்படுத்த இருக்கிறது.அடுத்த ஆண்டு கோயம்புத்தூர், இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் புதிய கார் ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதன்மூலம், அடுத்த ஆண்டில் ஆடி நிறுவனத்தின் ஷோரூம்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும். மொத்தமாக 25 ஷோரூம்கள் என்ற எண்ணிக்கையை மனதில் வைத்து இந்த விரிவாக்கப்பணிகளை ஆடி மேற்கொள்ள இருக்கிறது.
மேலும், இந்தியாவில் சிறப்பாக செயல்படும் விதத்தில், புதிதாக 600 ஊழியர்களை நியமிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments: