யூடியுப் மூலம் ஊழலை ஒழிக்க பிஹார் அரசு முடிவு


இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிஹாரில் ஊழலைக் களைய தொழில்நுட்பத்தின் உதவியை நாடும் புதிய திட்டம் வகுக்கப்பட்டுவருகிறது.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளுக்கு எதிரான மக்களின் புகார்களை வீடியோ பதிவுசெய்து யூடியூப் இணையதளத்தில்போடப்போவதாக அம்மாநிலத்தின் கிராம அபிவிருத்தி அமைச்சர் நிதிஷ் மிஷ்ரா கூறுகிறார்.

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹஸாரே நடத்திவருகின்ற பட்டினிப் போராட்டம், ஊழலைக் களைவதற்கான வழிவகைகள் பற்றிய ஒரு பெரும் விவாதத்தை இந்தியாவெங்கும் தோற்றுவித்துள்ளது.
சட்டம் கொண்டுவருவதன் மூலம் ஊழலைக் களைய முடியுமா என்பது பற்றி நாட்டின் நாடாளுமன்றம் விவாதித்துக்கொண்டிருக்க, ஒரு காலத்தில் ஊழலுக்குப் பேர்போன பீஹார் மாநிலத்தின் அரசாங்கமோ, இந்த வித்தியாசமான திட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது.

ஏழை மக்கள் சுமார் பத்து லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான அபிவிருத்தித் திட்டத்தில் தமது இந்த புதிய ஊழல் ஒழிப்பு வழிமுறையை அரசாங்கம் கையாளவிருக்கிறது.
இந்த வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகள் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள் என்று புகார்கள் வந்ததை அடுத்து இந்த புதிய வழிமுறையை கொண்டுவர முதல்வர் நிதிஷ் குமார் அரசாங்கம் நினைக்கிறது.இந்த புதிய வழிமுறையின் கீழ் அரசாங்கம் மாநிலமெங்கும் பல மையங்களில் வீடியோ கெமராக்களை நிறுவும். மக்கள் அங்கு வந்து லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பற்றி புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு பதிவுசெய்யப்படும் புகார் வீடியோக்கள் யூடியூப் வீடியோ இணையதளத்தில் பிரசுரிக்கப்படும்.இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய ஏழை மக்கள் யூடியூப் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்ககூட மாட்டார்கள். அதனை அவர்கள் பார்ப்பார்கள் என்பதற்கும் வாய்ப்பு மிகக் குறைவே.ஆனால் லஞ்சம் வாங்குகின்ற அதிகாரிகளை இவ்வகையாக வெளிச்சம் போட்டுக் காட்டி அவமானப்படுத்தினால், லஞ்சம் ஒழியும் என்று மாநில நிர்வாகம் கருதுகிறது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
நாட்ல நல்லது நடந்த சரி !

Post a Comment

0 Comments