வார நாளிதழ் ஒன்றின் சினிமா இணையதளம் நடத்திய, இன்றைய இளைஞர்களின் மனதில் இருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்விக்கு, அதிகப்படியான பேர் அஜீத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரபல வார இதழின் சினிமா இணையதளத்தில், இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. யூத்ஐகான் பட்டியலில் அஜீத், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.கடந்த ஜூன் 23ம் தேதி முதல் துவங்கிய இந்த சர்வே ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து, சர்வேயின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்டத்தட்ட 38நாட்கள் நடந்த இணையதள சர்வேயில் மொத்தம் 63, 434ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 43,384 ஓட்டு பெற்று அஜீத் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விஜய் 18,271 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கமல் 455 ஓட்டும், ரஜினி 376 ஓட்டும், சிம்பு 199 ஓட்டும், ஆர்யா 107 ஓட்டும், விக்ரம் 73 ஓட்டும், தனுஷ் 39 ஓட்டும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
இதில் விஷேம் என்னவென்றால் ஜூன் 23ம் தேதியிலிருந்து விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் கடைசி மூன்று நாட்களில் விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு, அஜீத் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதற்குகாரணம் விஜய்யை காட்டிலும், அஜீத்திற்கு தான் இணையதள ரசிகர்கள் அதிகம். இதற்கு முன்பு ஒருமுறை, வடஇந்திய இணையதளம் நடத்திய சர்வேயிலும் அஜீத்தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 Comments