சென்னையில் வந்துவிட்டது- டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.

by 10:03 PM 0 comments

பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் இந்த வசதியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இருந்து," JOIN CTP' என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், "அலர்ட்' தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான தகவல் வந்து சேரும். தொடர்ந்து, டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,கள் வரத் துவங்கும்.

இந்த திட்டத்தில் இருந்து விலக வேண்டும் என நினைத்தால்," LEAVE CTP" என அதே எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். இந்த சேவை,"ஈNஈ' சேவையுடன் கூடிய மொபைல் எண்ணிற்கு கிடைக்காது. இந்த சேவையை "www.smsgupshub.com/groups/ctp'' என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.இந்த சேவை குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது: இந்த சேவை இன்று (நேற்று) முதல் அறிமுகமாகிறது. இதில், முதல் தடவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான கட்டணம், மொபைல் பிளானில் உள்ளபடி செலுத்த வேண்டும். தொடர்ந்து பெறப்படும் தகவல்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இதில், போக்குவரத்து நெரிசல், விபத்து, ஆர்ப்பாட்டம், மறியல் நடக்கும் இடங்கள், வாகன போக்குவரத்து மெதுவாக செல்லும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

தினசரி காலை, மாலை வேளைகள் தவிர, சென்னையில் போக்குவரத்து பிரச்னை தொடர்பான எட்டு முதல் 20 எஸ்.எம்.எஸ்., வரை அனுப்பப்படும். பொதுமக்கள் வழக்கம் போல், தங்களுக்கு ஏற்படும் போக்குவரத்து தொடர்பான விஷயங்களை போக்குவரத்து கட்டுப்பாட்டறைக்கு தகவலாக அனுப்பலாம்

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: