இந்தியர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் .எப்படியோ கிரிக்கெட் பாத்துகிட்டு இருந்த எல்லோருக்கு சரியான அதர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது இந்திய அணி , ஏதோ பள்ளியில் படிக்கும் சிறுவர்களை விமானத்தில் ஏற்றி வெளிநாடு கொண்டு போய் இறக்கி விட்டு அனைவருக்கு வெள்ளை சீருடை அளித்து மைதானத்தில் விளையாட அனுப்பினால் அந்த சிறுவர்கள் எவ்வளவு சொதப்பு சொதபுவர்களோ அவ்வளவு சொதப்பினார்கள் நம் இந்திய அணி ,

உடனே ஒருத்தன் சொன்னான் , ஜெயிச்சா தலைமேல தூக்கி வச்சுகிட்டு ஆடுறீங்க , தோத்தா ஏன்டா திட்டறீங்க , வீரனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜம் என்றான்.

ஏம்பா தோற்பது சகஜம் ஆனால் உலகின் முதல் இடத்தில உள்ள ஒரு அணி கேவலமாக அதுவும் மிக கேவலமாக் விளையாடுகிறது , அதை இங்கிலாந்து ரசிகர்களும் , தொலை காட்சி சானல்களும் ,ஏன் இங்கிலாந்து வீரர்களும் கூட ஏளனப் பார்வை பார்கிறார்கள் , நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து இவ்வளவு மோசமாக விளையாடி பார்த்ததில்லை ,
நாம் உலக கோப்பை வாங்கிய பொழுது கிரிக்கெட் பார்த்தது ,அதற்கு பிறகு நான் வீட்டில் (BIGTV) இருந்து நான் ஸ்போர்ட்ஸ் சேனல் கட் பண்ணிட்டேன் ,ஏன்னா கிரிக்கெட் தொடர்ந்து பார்த்து சலிச்சு போச்சு ,
இங்கிலாந்து தொடரின் முதல் மேட்ச் அப்டேட் மட்டும் அப்பபோ பாத்துகிட்டு இருந்தேன் , பார்த்தா நம்ம அணி தோத்து போயிருச்சு , இங்கிலாந்து காரனுங்க ஆட்டம் ரொம்ப அதிகமா இருந்துச்சு உடனே வழக்கம் போல எனக்குள்ள ஒரு ஆதங்கம் , வேகம் , கண்டிப்பா நாம ஜெயிக்கணும் , ஜெயிப்போம் என்ற நம்பிகையுடன் உடனே ஸ்டார் கிரிக்கெட் சானலை பார்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டேன் , அடுத்த மேட்ச் பார்க்க ஆரம்பிக்க ,இரண்டாவது மேட்ச் தோல்வியில் முடிந்தது , உடனே நாம டோனி விளக்கம் கொடுத்தார் , அடுத்த மட்சில் சேவாக் வறார் ,கண்டிப்பாக ஜெயிப்போம் என்றும் , அடுத்த மேட்ச் தோற்று போனால் நம்முடைய முதல் இடம் பறிபோகும் , அதனல் நம்முடைய அணியும் கொஞ்சம் வெறியுடன் விளையாடும் என

மூன்றாவது மேட்ச் பார்க்க ஆரம்பித்தேன் , சேவாக் ஜீரோ ரன்னில் அவுட் ஆனார் , இரண்டாவது இன்னிங்க்ஸ்சிலும் ஜீரோ , டோனி மட்டும் அடித்தார் , ஆனால் இந்த மேட்ச் பார்க்கும்போது எனக்கு நம் அணியை பார்த்து பாவமாக இருந்தது ,
இதோ நம் அணி முதல் இடத்தை தரை வார்த்து கொடுத்து விட்டது (எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த இடத்துக்கு போனோம் ), நமது இந்திய கிரிக்கெட் கழகம் தோல்வி குறித்து விசாரணை நடத்தபோவதாக அறிவித்துள்ளது ,இனி என்ன பண்ணி என்ன செய்வது , முதல் இடம் போனது போனதுதான் , சாதனை சாதனைதான் , வேதனை வேதனைதான் ,

முதல இந்த IPL மேட்ச் விளையாடுவதை நிறுத்தனும் , அப்பதான் ஒழுங்கா விளையாடுவாங்க , சரி உடுங்க எல்லாம் ஒரு பாடம் நம் அணிக்கு , அடுத்த மாட்சிலாவது இந்தியர்கள் யார் என்பதை அந்த வெள்ளைக்கார பதருகளுக்கு நம் அணியினர் புரிய வைக்க நன்றாக விளையாடுவார்கள் , அதில் சச்சின் நூறாவது சதம் அடிப்பார் என்ற நம்பிகையுடன் விடை பெறுகிறேன் , நன்றி

டிஸ்கி : இந்தியர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் , ஏன் என்றால் எப்படியும் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வருவார்கள் , அப்போ ஊம குத்தா குத்தி விட்ரலாம் !?

No comments: