சிக்குன்-குனியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து

by 9:39 AM 0 comments

சிக்குன்-குனியா காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடும் காய்ச்சலோடு மூட்டு வலியை ஏற்படுத்தும் சிக்குன்-குனியா நோய், சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைப் பாதித்தது. இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிக்குன்-குனியாவை தடுக்க வழி செய்யும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன்-குனியா வைரசைக் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து, பரிசோதனை ரீதியாக எலிக்கு பயன்படுத்தப்பட்டு, அதில் வெற்றி காணப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
"மனிதர்களுக்கு இந்த மருந்து எந்த விதத்தில் வேலை செய்கிறது என்பது உள்ளிட்ட சோதனைகள் முடிந்த பின், இதற்கு அனுமதி கிடைக்கும். இந்த தடுப்பூசி தயாரிப்பு செலவும் குறைவு தான்' என, டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார்.


ஆங்சான்சூயி அரசியல் சுற்றுப்பயணம்

மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவரான ஆங்சான்சூயி அரசியல் சார்ந்த ஆதரவாளர்களை சந்திக்கும் விதமாக தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். பாகோ மற்றும்யாகோன் ஆகிய இரண்டு நகரங்களுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவரது சுற்றுப்பயண பாதையில் ஏராளமான ஆதரவாளர்கள் சாலையின் இரு புறங்களிலும் குவிந்திருந்தனர். ஆங்சான்சூயி காரை பின்தொடர்ந்து சென்ற 20க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உடன் சென்றனர். ஆன்சான்சூயியை கண்ட மாவ் துசா என்ற 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூறுகையில் ஆங்சான்சூயியை நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் நான் இனி சந்தோசமாக இறப்பை எதிர்கொள்வேன் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: