திருச்சி மாநகரில் மொபைல்ஃபோனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவதால் அதிக விபத்துக்கள் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு தெரியவந்தது.இதையடுத்து மாநகரில் பைக் ஓட்டும் போது மொபைல்ஃபோன் பேசுவோரை பிடித்து, அபராதம் வசூலிக்க போலீஸாருக்கு கமிஷஷனர் மாசானமுத்து உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மாநகரில் மொபைல்ஃபோன் பேசிக் கொண்டு சென்றோரை பிடித்து போலீஸார் எச்சரித்து, தலா 100 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
ஒருநாளில் மட்டும் 208 பேர் மொபைல்ஃபோன் பேசிக் கொண்டே பைக் ஓட்டி போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து 20 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஒருமுறை அபராதம் கட்டியவர்கள் அடுத்தமுறை மொபைல்ஃபோனில் பேசிச் செல்லும் தவறை செய்தால், சம்மந்தப்பட்ட நபரின் மொபைல்ஃபோன் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் மாசானமுத்து எச்சரித்துள்ளார்.
0 Comments