ஜூலை முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி!

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ரஜினிகாந்த், நேற்று மாலை டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்போதைக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான செக்கப்புகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியிருப்பார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும்.

ஜூலை முதல்வாரம் வரை இங்கே தங்கியிருக்கும் ரஜினி, இரண்டாவது வாரம் நாடு திரும்புகிறார். பாதுகாப்பு மற்றும் தனிமை கருதி இந்த விஷயத்தை வெளியிடாமல் உள்ளனர் ரஜினி குடும்பத்தினர்.இதற்கிடையே, ரஜினியை வரவேற்க இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டனர் அவரது அனைத்து மாவட்ட ரசிகர்களும்.

திரையுலகம் காணாத வகையில் ஒரு மெகா வரவேற்பை விமான நிலையத்திலேயே அளிக்கலாம் என நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினரும் முடிவு செய்துள்ளனர்.

No comments: