போன பதிவு எழுதியதில் பல பேரின் கோபத்திற்கு ஆளாகும்படி ஆகிவிட்டது , வேறு வழியில்லை , உண்மையை சொன்னால் எங்கும் இப்படிதான் ,
இன்றைக்கு வருவோம் ,
நேற்று ஒரு உணவகத்தில் சாப்பிட உட்கார்ந்த போது அங்கே இருந்த ஒரு பெண் சர்வர் , ஒருவர் சாபிட்டு விட்டு எழுந்து போகும் ஒருவருக்கு தேங்க்ஸ் என்று சொன்னார் , நான் யோசித்துகொண்டே எனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தேன் , அங்கே இருந்த பெண் சர்வர்கள் எல்லோரும் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள் , சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று ?
சாப்பிட்டவர் ஏதும் டிப்ஸ் குடுக்காமல் சென்றுவிட்டார் ,அதற்கு அவரை கிண்டல் செய்யும் விதமாக அந்த பெண்மணி தேங்க்ஸ் என்று அவரை நக்கல் செய்துள்ளார்!
பொதுவாக ஆண்கள்தான் எப்போதும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் , ஆனால் இன்று பெண்கள் கூட டிப்ஸ் தரவில்லை என்றால் , அதற்கு அவர்களின் எதிர்விளைவு ஒன்றும் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை , டிப்ஸ் தருவது என்பது தனிப்பட்ட ஒருவரின் எண்ணம் , ஆனால் அதை இப்போது எல்லோரும் கட்டாயம் ஆக்கிவிட்டார்கள் , டிப்ஸ் குடுக்காமல் போனால் நமை மிக கேவலமாக பார்ப்பது , இது போன்ற சில விரும்பத்தகாத செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் ,
சாப்பிட்டு விட்டு செல்பவர்கள் இனி நல்ல அனுபவங்களோடு செல்வார்களா என்று தெரியாது ?
2 Comments